"தனித்" திருத்தாண்டகம் II திருச்சிற்றம்பலம் | தாண்டகம் |
| அப்பனீ யம்மைநீ யைய னுநீ யன்புடைய மாமனு மாமி யுநீ ஒப்புடைய மாதரு மொண்பொ ருளுநீ யொருகுலமுஞ் சுற்றமு மோரூ ருநீ துய்ப்பனவு முய்ப்பனவுந்தோற்றுவாய்நீ துணையாயென்னெஞ்சந்து துறப்பிப்பாய்நீ யிப்பொனீ யிம்மணிநீ யிம்முத் துநீ யிறைவநீ யேறூர்ந்த செல்வ னீயே |
1 ஆட்டுவித்தாலாரொருவ ராடா தாரே யடக்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே ஒட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகு வித்தா லாரொருவ ருருகாதாரே பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே பணிவித்தாலாரொருவர் பணியாதாரே காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே. திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவி லூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் விருப்போடு வெண்சங்க மூதா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே.. 5 திருநாம மஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் றீவண்ணர் திருமொருகாற் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகி லளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி பிறக்கின் றாரே. அத்தாவுன் னடியேனை யன்பா லார்த்தா யருணோக்கிற் றீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனையு மரியநீ யெளியை யானா யெனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே இத்தனையு மெம்பரமோ வைய! வையோ! வெம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே. 8 குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லே னான்பொல்லேன் ஞானி யல்லே னல்லாரோ டிசைந்திலே னடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவு மிகப்பெரிதும் பேச வல்லேன் இலம்பொல்லே னிரப்பதே யீய மாட்டே னென்செய்வான் றோன்றினே னேழை யேனே. 9 சங்கதிநிதி புதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவா ரவர்செல்வ மதிப்போ மல்லோ மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்; அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யரா யாவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகி லவர்க்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. திருச்சிற்றம்பலம் |