| குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார் சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பராபரனென் பதுதமது பேராக் கொண்டார் பருப்பதங்கைக் கொண்டார் பயங்கள் பண்ணி இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டா ரிடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார், சூலைதீர்த்தடியேனை யாட்கொண்டாரே என்று பலவாறும் தம்மை இறைவர் ஆளாக்கிக் கொண்ட அருளைப் பாராட்டியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆமயம் - பசுத்தன்மை. ஆணவமலத்தாற் சுட்டுப்பட்ட உயிர்த்தன்மை. தலை - அவ்வாறு அரிந்துகொண்ட அந்தத் தலை. (அத்தலையின்) நிறைவாம் - என்று பின்னும் கூட்டியுரைக்க வைத்தார். "பிரமன் பெருந்தலை நிறைய தாகக், கருமன் செந்நீர் கபால நிறைத்தனை" (பெருந்தேவ பாணி - 11-ம் திருமுறை). இடம் - இடது கை. மான் - உவம ஆகுபெயராய் மான்போன்ற உமாதேவியை உணர்த்துவதாகக் கொண்டு. இடம் - இடப்பாகம் என்றலுமாம். கண்ணானோக்கி - காமனைக் கண்ணானோக்கி உடல் கொண்டார் எனவும், கண்ணானோக்கிக் கண்ணப்பர் பணிகொள் எனவும் முன்னும் பின்னுங் கூட்டி உரைக்க வைத்த இடைநிலைத் தீபம். கண்ணப்பரைக் கண்ணானோக்கிப் பணி கொண்டமை "அங்கணர் கருணைகூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) "முன்பு திருக் காளத்தி முதல்வனா ரருணோக்கால்" (803) முதலிய திருவாக்குக்களா லறியப்படும். ஆடியேனை ஆளாக்கொண்டார் - இது இப்பதிகக் கருத்து. இப்பதிக முழுமையும் வரும் எல்லாப் பாட்டுக்களின் முடிபும் நோக்குக. - (2) முயங்க - சேர; துப்புரவு - தூய்மை. அழகு என்றலுமாம். அப்பலி - தாம் வேண்டி வந்த அந்த என்று முன்னறிசுட்டு. - (3) முடி - முடியாக. சூடும் பொருளாக; அடி கொண்டார் - அடித்தலைக் கொண்டதனால் ஆர்க்கின்ற; வடி - கூர்மை; "கங்காளந் தோண்மேலே காதலித்தான்" (திருவாசகம்). கங்காளம் எலும்புக் கூடு. ஊழியில் முடிந்த பிரம விட்டுணுக்களுடைய எலும்புகள். "கங்காளநாதர்" - சூலை - தீர்த்து - நாயனாரது சரிதக் குறிப்பு. சமண் தீர்த்து (5); உடலுறு நோய் தீர்த்து" (6); வெந்துயரந் தீர்த்து (10); இடருறு நோய் தீர்த்து (11). - (4) பொக்கணம் - திருநீற்றுப்பை. அக்கு - எலும்புக் கோவை. உருத்திராக்கமுமாம். அடங்க - ஊழியில் தம்முள் ஒடுங்க; கொடியான் - சலந்தராசுரன். ஆழி - இதனைத் தவஞ்செய்து பின்னர்த் திருமால் பெற்றனர். செடியன் - குற்றமுடையேன். - (5) அந்தகன் - அந்தகாசுரன். சுந்தரன் - ஆலாலசுந்தரர். பின்னர் ஆளுடைய நம்பிகளாக அவதரிக்க உள்ளவர் என்ப. மாகாளன் வாசல் காப்பாக - துவாரபாலகர்களுள் ஒருவராக மாகாளர் என்பவர் அமர்த்தப்பட்டவர் என்பது ஆகமம். சிவபூசையில் துவாரபாலகர்களுள் வைத்து மகாளர் பூசிக்கப்படுதல் காண்க. "நந்தி மாகாள ரென்பார் நடுவுடையார்க ணிற்க" (தேவா). - (6) பாரிடம் - பேயாகிய சிவகணம். பல கருவி - பலவகை இயங்கள்; பயில - முழக்க. பவள நிறம் - திருமேனி. பளிங்கு - "உச்சிமுக மீசான மொளிதெளிய பளிங்கே" ஊரடங்க - ஊர்களெல்லாம் தம்மவாயிருக்க. - (7) கோடி - திருமறைக் காட்டினருக்குக் கடற்கோடி. தென்கோடிக் கரையுமாம். - (8) வேதியன் - |