பக்கம் எண் :


706திருத்தொண்டர் புராணம்

 

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொல்லிக் குளிர் அறப்பள்ளி - "கொல்லியறப் பள்ளி" (அடைவு - தாண் பார்க்க). "கொல்லியான் குளிர்தூங்கு குற்றாலத்தான்" (தேவா). (சேலம் - நாமக்கல் தாலூகா). "குடக்கொல்லி" (ஏகம்ப - அந் - 57). முல்லைப் புறவம் முருகன் பூண்டி - முல்லைத் திணை நிலத்தின் புறவத்து உள்ளது என்பது. முல்லை - தலவிசேடத்துக்குரியது. "முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி" (நம்பி - தேவா). முளையூர் - தேவார வைப்புத்தலம். திருச்சத்தி முற்றத்திலிருந்து பழையாறைக்குப் போகும் இடையில் உள்ளது. இப்பதிகத்துள் வைப்புத் தலங்கள் பலவும் வருகின்றன. கல்லில் - மலைகளுள்ளே. கல் - மலைக்கு வந்தது; ஆகுபெயர். - (2) பேரூர் - கொங்கு நாட்டு வைப்புத்தலம். பேராவூர் - வைப்பு. பெருந்துறை - மணிவாசகர்க் கருள்புரிந்த தலமாகிய திருப்பெருந்துறை என்று கருதப்படும். காம்பீலி - வைப்பு. நேச நாயனாரது தலம். பிடவூர் - திருச்சியிலிருந்து துறையூர் போகும் வழியில் 10 நாழிகையளவில் உள்ளது. சாத்தனார் தலம் சிறப்பு. (வெள் - சருக்கம் - 52). - (3) ஏர் - வைப்புத்தலம். கும்பகோணத்துக்கு வடக்கில் 2 நாழிகையில் உள்ளது. ஏரகரம் - ஏராரம் - ஏராவரம் என மருவி வழங்கும். "ஏராகிய மும்முடிச் சோழ மங்கலம்" என்பது கல்வெட்டுக்களிற் கண்டது. இடவை - இதுவும் வைப்புத்தலமென்று கருதப்படும். ஏமப்பேறூர் - நமிநந்தியடிகணாயனாரது தலம். தேவார வைப்பு. சடைமுடி - சாலைக்குடி - தக்களூர் - கோட்டுக்காடு என்பவையும் இவ்வாறே; தக்களூர் திருநள்ளாற்றுக்கு அணிமையில் உள்ளது. கோத்திட்டை - திருப்பறங்குன்றம். (கோ - பரம். திட்டை - மேடு; மலை).-(4) எச்சில் - இளமர் - ஏமநல்லூர் - இறையான்சேரி - அளப்பூர் - இவை தேவார வைப்புத் தலங்கள். (எச்சிலிளமர் - மணச்ச நல்லூர் என்பாருமுண்டு). அளப்பூர் - தரங்கம்பாடி என்பர். கச்சிப் பலதளி - காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபாலயம் முதலிய பல கோயில்கள். - (5) கொடுங்கோளூர் - அஞ்சைக்களம் - கொடுங்கோளூர் - சேரர் தலைநகரம். சேரமான் பெருமான் அரசாண்ட தலைநகரம். தேவார வைப்புத் தலம். இப்போது பகவதி கோயில் விளக்கம். செங்குன்றூர் - விறன்மிண்ட நாயனாரது தலம். பக் - 632 - தலச்சிறப்புப் பார்க்க. மலைநாட்டுப்பதி. கொங்கணம் - நியமநல்லூர் - தேவார வைப்புத் தலங்கள். எழுமூர் - எழும்பூர் (Egmore) என்ப. ஏழூர் - தோழூர் - இவையும் வைப்பு. ஏழூர் - கொங்குநாட்டில் திருச்செங்கோட்டினின்றும் வட கிழக்கில் 15 நாழிகையில் உள்ளது. தோழூர் - (கொங்கு நாடு) நாமக்கல்லினின்றும் மோகனூர் வழியில் 6 நாழிகையில் உள்ளது. ஏமகூடம் - கதிர்காமம் என்ப. கடம்பை இளங்கோயில் - கடம்பூர்த் தலத்தில் உள்ள தனிக்கோயில். - (6) மந்தாரம் - வைப்பு. வாரணாசி - காசி; இதுவும் வைப்பு. விளத்தொட்டி - விராடபுரம் - திருச்சி - பெரம்பலூர் தாலூகாவில் உள்ளது. பிரம்பில் - (திருச்சி) பிரம்பலூர். கண்ணை - களர்க்காறை - இவையும் வைப்பு.-(7) வேங்கூர் - வைப்பு. "வேங்கூருறைவாய்" - (நம்பி - ஊர்த்தொகை). - (8) உஞ்சேனை மாகாளம் - உருத்திரகோடி - திருக்கழுக்குன்றத்தினருகில் உள்ளது. தஞ்சை (தளிக்குளம்?) - சிவகங்கைக் குளத்தினடுவுள்ள கோயில். பொதியின் மலை - மாதானம் - வேதீச்சரம் - வீவிசுரம் - வெற்றியூர் - கஞ்சாறு - பஞ்சாக்கை - இவை வைப்புத் தலங்கள். தஞ்சை - தளிக்குளம். கஞ்சாறு - மானக்கஞ்சாற நாயனாரது தலம்; தலவிசேடம் பார்க்க. - (9) திண்டீச்சுரம் - திண்டுக்கல் என்றும் திண்டிவனம் என்றும் வழங்குவதாய் மகா மகோபாத்தியாய் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் கூறுவர். திண்டீச்சுரம் - கூந்தலூர் - கூழையூர் - குமரி கொங்கு - இவை வைப்புத் தலங்கள். குமரி கொங்கு - கொங்கு நாட்டில் காவிரியின் பல துறைகளுள் குமரித்துறை என வழங்கும் தலம். நாமக்கல்லினின்றும் 16 நாழிகையளவில்