உள்ள மோகனூர் என்ப. சுவாமி குமரீசுவரர். "கொங்குதண் குமரித் துறையாடிலென்" (குறுந்). குமரி - தென்குமரி என்பாருமுண்டு. அண்டர் தொழும் - தேவர்களைக்காக்கத் திரிபுர மெரித்த வீரம் நிகழ்ந்த தலமாதல் குறிப்பு. அசோகந்தி - வைப்பு. - (10) சூலமங்கை - பசுபதி கோயில் என்னும் நிலயத்தின் அருகாமையில் சூலமங்கலம். சோமீச்சரம் - வடநாட்டில் சோமீசம் என்றும், குடந்தைச் சோமீச்சரம் என்றும் கருதுவர் (திருப்புகழ்). ஊற்றத்தூர் - கறையூர் - (மீனாட்சிசுந்தரம் பிள்ளை - ஊற்றத்தூர் - பதிற்று - அந்தாதி) திருச்சியின் வடக்குப் பிரம்பலூர் தாலுக்கா, ஊட்டத்தூர் என வழங்கும். இவை வைப்பு. கறையூர் - பாண்டிக்கொடுமுடி என்பாருமுண்டு. - (11) புலிவலம் - (திருச்சி - முசிரி தாலூகா) பொய்கை நல்லூர் - இவை வைப்பு. வன்னி - வன்னியூர். கோயில் பல கண்டாற் - கயிலாய நாதனையே காணலாமே - இக்கருத்தால் இறைவரது எங்கும் நிறைந்த தன்மை போற்றப்பட்டது. குறைந்த திருநேரிசை V-1திருச்சிற்றம்பலம் | நேரிசை |
| வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குச் சேயேன் நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ! இன்றுளே னாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே. 1 பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன் நாச்சொலி நாளு மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் றோன்றி னேனே! |
6 திருச்சிற்றம்பலம் குறைந்த திருநேரிசை 2திருச்சிற்றம்பலம் | நேரிசை |
| தம்மானம் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து அம்மானை யமுதன் றன்னை யாதியை யந்த மாய செம்மான வொளிகொண் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற எம்மானை நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே! |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இந்த இரண்டு பதிகங்களும் "ஏழையேன் என்செய்வான் தோன்றி னேனே" என்ற கருத்துக் கொண்டு முடிதலின் இப்பெயர் பெற்றன. குறைந்த என்பதற்கு குறைந்தடைந்த என்று ஆசிரியர் பொருள் விரித்தனர். குறைந்தடைதலாவது தன் குறைபாட்டினை நினைந்து உருகிப் பணிந்து நிற்றல். தம் குறைகூறி அடைகின்ற தன்மை. V-1. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வாளாகம் - இருக்கும் இடத்தின் அணிமையாகிய சுற்று; வளைக்கப்படுவது. ஆதலாலே - ஐம்புலன் வெல்வதும், அது தன்னாற் கூடாதபோது வென்றவர்பாற் செல்வதும் என்ற இரண்டுமே செந்நெறிக்குக் காரணமாவன என்பது. துளும்புதல் - அகலப்படுதல். இன்றுளேன் நாளையில்லேன் - நிலையாமை குறித்தது.-(2) ஆதலாலே - முன்பாட்டிற் போல, உணவுர்டைமைக்குத் தான் கற்றலும், அது கூடாதபோது கற்றவரோடு உறுதலுமே காரணமாம் என்பது. பேதைமார் தமக்கும் பொல்லேன் - ஞான |