பக்கம் எண் :


708திருத்தொண்டர் புராணம்

 

நெறியிற் சேறலால் பேதைமார்க்குப் பொல்லேன். தமக்கும் - உறைப்பின்மையால் ஞான நெறியிற் பிழைத்ததும் அன்றி என உம்மை இறந்தது தழுவியது. இளையனுமல்லேன் (9) என்பதும், வரும் பதிகத்துள் "மடந்தைமார் தமக்கும் பொல்லேன்" (3) என்பதும் இக்கருத்து. - (3) பாட்டினாய் போல? பாடு - பெருமை; அஃதில்லாத நாய்போல. எதுகை நோக்கிப் பாட்டு என நின்றது. பின், "நாயினுங் கடைப்பட் டேனை" என்பது காண்க. - (4) உரைக்கடந்து - உரையின் மட்டிலடங்காது மேற்சென்று. "ஓதற் கரியவன்", "உரை யுணர் விறந்து நின்று." இரைக் கடந்து - முதலைபோன்ற ஐம்புலன்களுக்கு இரையாக அடைந்து. இன்ப வாழ்க்கைக்கும் இரைக்கும் எனவும் கொள்ளலாம்; இன்பம் - பொருந்தலின்பம். இரை - பேருண்டி. "கழிபே ரிறையான்க ணோய்" (குறள்). உருகுதல் - ஆழ்ந்துபடுதல். - (5) செம்மை - செந்நெறிதரும். அம்மை நின்று - அத்தன்மையுள் நின்று. முடிவில் வாழ்க்கைக்கு - நலத்தில் முற்றுமாறு செல்லாக் குறையுடைய பொக்க வாழ்க்கையின் கண்; உருபு மயக்கம். ஆதலாலே - காரணம் உணர்த்திற்று. - (6) பேச்சொடு........கூச்சிலேன் - உலகர், தம் குற்றம் ஓராது, பிறர் குற்றமே தெரிந்து புறம் பேசும் இயல்பு குறித்தது. ஆதலாலே - கொடுமையை விடாமைக்குக் காரணங் கூறிற்று. நாச்சொலி - நாவினால் வாழ்த்தி. - (7) தேசனைத் தேசமாகும் திருமால் - விசுவம் நாராயணன் எனவும், விசுவநாதன் சிவன் எனவும் கூறும் வேதக் கருத்து. பூசன் - பூஜ்யன் என்றது பூசன் என நின்றது. பூசனைப் புனிதன் - பூசிக்கத்தக்க புனிதன்; பூசனை - பூசை என்றலுமாம். நிவஞ்சகம் - பொய். - (8) விளைக்கின்ற வினையை நோக்கி - மேலும் முளைக்கின்ற வினையைப் போக - முன் செய்த வினை காரணமாக வரும் இத்துன்பங்களைக் கண்டபின்பேனும், இனிவரும் வினைகளுக்கு இடந்தராதொழிதலின்றி, முன் வினைப்பயனைக் கண்டுவைத்தும் மேல்வினை செய்தலை ஒழியாது விளைவறிவு (9) என்று மேற்கூறுவதுமிது. வெண்மயிர் விரவி - மூப்புக் குறித்தது. இத்தனை காலம் கண்டும் என்பது குறிப்பு. வெள்ளம் - கங்கை. இருமி ஊன்றி - வெண்மயிர் விரவி என்ற மூப்பின் பின்வரும் பிணியைக் குறித்தது. நாயனாரது கழிபெரு மூப்புப் பருவக் குறிப்புமாம். இளையனு மல்லேன் என்ற மேல்வரும் பாட்டுக் குறிப்பும் காண்க. - (9) விளை வறிவு - இத்துன்ப விளைவு முன்செய்த அக் கன்கத்தின் விளைவு என்ற அறிவு. களைகண் - பற்றுக்கோடு. காமரம் - இசை. சீகாமரம்; பண் குறித்தது. - (10) வெட்டன - வெடு வெடுத்த சொற்கள். "வெட்டெனப் பேசன்மின்" (நம்பி . தேவா). எட்டன் - எண் குணத்தன். அணிமையில் உள்ளவன் என்ற குறிப்புமாம்.

V-2. (1) தம் மானம் - தமது பெருமையாகிய செருக்கு. காப்பு அது ஆக - அதனையே தனக்குக் காவலாகக் கொண்டு. இறைவரது நீதியாகிய காவலை வேண்டாராகி என்பது. செம்மான ஒளி - செவ்வான ஒளி. - (2) கொப்புள் - நீர்க்குமிழி. களேபரம் - உடம்பு. - (3) கூழையேன் - தொண்டர்கள் பின் செல்பவன். கூழை - அணி வகுப்பில் பின்னிடம். "கடைக் கூழைச் சென்மின்கள்" (படை யெழுச்சி - திருவா). - (5) காமரம் - சீகாமரம்; சிவனுடைய இசைப்பாட்டு. அல்லேன் - மேல் பொல்லேன் (3) என்ற கருத்து. இறை - சிறிது போது. - (10) தளைத்து வைத்து - அகப்படுத்தி. உலையை.......ஆமை போல - பழமொழி. அடுப்பின்மேல் வைத்து எரிமூட்டி ஏற்றிய பாண்டத்துள் நீரில் விளையாடும் ஆமைபோல என்பது துன்பங்களுக்குள் நின்றும் உணர்வில்லாமை குறித்து. இளைத்து - அழி சுகங்களுக்கு எளியனாய் அடிமைப்பட்டு.