பொது - தனித் திருநேரிசை VI - 1. திருச்சிற்றம்பலம் தொண்டனேன் பட்ட தென்னே? தூயகா விரியி னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி யிண்டை கொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக் கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே. 1 உடம்பெனு மனைய கத்துள் ளுள்ளமே தகளி யாக மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி யிடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கிற் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. 4 அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச் சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை யெங்குற்றா யென்ற போதா லிங்குற்றே னென்கண் டாயே. 8 பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயி றிலங்க வங்காந் தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்; இருவரு மொருவ னாய வுருவமங் குடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்கநான் றிரியு மாறே. 10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- IV - 1, 2, 3 பதிகங்களி னிறுதியிற் காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இப்பாட்டு நாயனார் செய்த ஆன்மார்த்த சிவபூசையின் திட்பநுட்பங்களை அறிவிக்கின்ற அருமையும் பெருமையு முடையது. இருக்கு - வேதமந்திரங்கள். சிவாகம தீக்கையுடையோருக்கு வேதமந்திராதிகாரம் உண்டென்பதறியப்படும். இருக்கு - மந்திரப் பொதுமை யுணர்த்திய தென்றலுமாம். ஏறநோக்கி - "குறிப்பறி முருகன்" (பிள் - தேவா). 1026-ம் பார்க்க. கண்டன் - பாசத்தைத் துண்டிப்பவன். கண்டு - அகத்தும் புறத்தும் ஒரு தன்மையாகக் கண்டு. இராதே - அவ்வனுபவத்தில் அழுந்தியிராமல். - (2) பின்னிலேன் முன்னிலேன் - பிற்றைக்கு வேண்டப்படும் நற்செயலும், இதன் முன் காரணமாய் நிற்கும் நற்செயலும் இல்லாதவன். சில்நிலா - இளங்கதிர். - (3) சிரிப்பின் காரணம், கள்ளமாய்ப் புறம்பு தரித்த தொண்டர் வேடத்துள் உடனே நின்று அரன் அறிவானே என்ற உணர்வு வருதல். "உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணானோ வுற்று" (11 சூத்). என்று சொற்பொரு ளெடுத்தாளப்பட்டது காண்க. - (4) தியானத்தின் தன்மை விளக்கின் உருவகத்தினால் விளக்கப்பட்டது. உடம்பு - வீடு; உள்ளம் - தகளி - அகல்; உணர்(வு) - நெய்; உயிர் - திரி; ஞானம் - தீ. மடம்படும் உணர் - சிந்தனை ஞானம். உயிர் - ஆன்மா. திரி மயக்குதல் - திரியை முறுக்கி நெய் நின்றெரியத்தக்க இடமாக்குதல். மயக்குதல் - சேர்த்தல்; கலத்தல். இடம்படும் ஞானத்தீ - நிறைவாகிய இறைஞானம். - (5) வஞ்சப் பெண் (1) - துர்க்கை? திருமால்? வஞ்சப் பெண், ஏனையவை நாயகனை வஞ்சித் தொழுகும் பெண்? திரோதான சக்தி? "கள்ளக் காதல னிடத்தன்பு கலந்துவைத் தொழுகும், உள்ளக் காரிகை மடந்தை" (திருவிளை - வாதவூ).-(6) "இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பு" பழமொழி. "இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலையேன்" (திருவா - நீத் - 9) |