ஒரு ஈற்றடி முடிபையேனும், ஒரு கருத்து முடிபையேனும் பற்றாது பலவாறும் எழும் அரிய அனுபநிலைக் கருத்துக்களைப் பதிகமாக ஆக்கி அருளப்பட்டன. இவ்வாறு வரும் தனித் திருக்குறுந்தொகை, தனித் திருவிருத்தம் தனித் திருத்தாண்கடங்கள் பார்க்க. இவ்வாறுள்ள தனிப் பதிகங்கள் நாயனாரது திருவுள்ளத்தில் அழுந்தி அவ்வப்போது மேற்பொங்கி வழியும் ஞான ஊற்றுக்களாதலின் மிகப் பயின்று அழுந்தி யறிந்து அனுபவிக்கத்தக்கன. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இப்பாட்டு இறைவரை, அடிமைத் திறத்தின் அமைதியினுட்பட்டே நகைச்சுவைபடப் போற்றியதும் சத்தியைப் போற்றுவதுமாகிய கருத்து. புகுந்த அன்று - சத்தியோடு வெளிப்பட நின்ற அன்று. திருமணம் புணர்ந்த ஞான்று. - (2) முன் பாட்டைத் தொடர்ந்துகொண்டு பாராட்டிய கருத்து. ஏவணச் சிலையினாரை யாவரே யெழுதுவாரே - "ஏவணச் சிலையி னாரை யார் தொடர்ந் தெட்ட வல்லார்?" (190) என ஆசிரியர் இதனை எடுத்தாண்டனர். - (3) இப்பாட்டினால் திருவலகு, திருமெழுக்கு, திருமாலை, திருவிளக்கு, திருப்பாட்டு என்பனவாதி சரியை நெறிகளின் பலன் எடுத்துக் காட்டி வற்புறுத்தப்பட்டது. விளக்கினார் - திருவலகிட்டுத் திருமுற்றத்தை விளக்கினவர். விளக்கிட்டார்...........ஞானம் - திருவிளக்குத் திருப்பணி செய்து பேறடைந்த நமிநந்தியடிகள் "திருவாரூர் மன்னர் பாத நீழல்மிகுவளர்பொற் சோதி மன்னினார்" (மேற்படி - புரா - 32) என்ற குறிப்புக் காண்க. கீதம் - வேதப் பொருள்களை அடக்கிச் சிவன் புகழ்களைப் பாடி முழக்கும் இசைப் பாட்டு. "வேதவொலி.......கீதவொலி யறாத்தில்லை" (237);" கீதத்தை மிகப்பாடு மடியார்கள்", "பண்ணொன்ற விசைபாடு மடியார்கள்" (பிள்ளை - தேவா - புள் - வேளூர்). - (4) மந்திர.......நீறணிய - திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தை விதிப்படி எண்ணித் திருநீறிடுதல் வேண்டும். பெற்றால் - பெறுதலின் அருமை குறித்தது. வினையும் நோயும் - வினையும் அது காரணமாக வரும் நோயம். விறகிட்டன்றே - விறகில் அழல் புக்கது போன்றதாகும். "விண்ணுற வடுக்கிய" என்ற நாயனாரது நமச்சிவாயப் பதிகப் பாட்டுப் பார்க்க. - (5) ஐம்புலன்களை வேடர்களாக்கி முற்றுருவகப் படுத்தியமைந்த பாட்டு. புள்ளுவர் - வேடர். - (6) பிண்டம் - உடல். - (7) பன்றிபோல் - சேற்றில் உழன்று மலம் உண்ணும் தன்மையாற் போந்த உவமம். வினைபற்றி வந்த உவமம். பின்னிரண்டடிகள் மக்கள் அபிமானம் செய்யும் யாக்கையினிழிபு கூறின. - (10) திருவடிபட அரக்கனும் (இராவணன்) வருந்தினான்; நானும் வருந்தினேன். அவன் தன் தலை நொந்தமைக்கு வருந்தினான்; நான் என் தலையில் வைத்தமையால் திருவடி நோகுமே என்று திருவடிக்கு வருந்தினேன். திருவடி தீக்கை பெற்ற அருமையைப் பாராட்டியது. மொய்த்தகால் - கால் - கதிர். பொது - ஆருயிர்த் திருவிருத்தம் VIIதிருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வா! முறை! யென் றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா வொட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினா லட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- புரமூன்றும் அட்டான் - மூவான் - இளகான் - இமையாத முக்கட் பெரியன். பெரியார் பிறப்பறுப்பான் - என்றுந் தன்பிறப்பை அரியான். |