பக்கம் எண் :


714திருத்தொண்டர் புராணம்

 

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இது சிவபெருமான் கடல் விடத்தைக் கண்டத் தடக்கித் தேவரைக் காத்த சரிதம் கூறுவது. பருவரை - மாமேரு. அரவம் - ஆதிசேடன்; மால் நிறத்தை அடுவான் - அஞ்ஞான்று வெள்ளை நிறத்துடன் இருந்த விட்டுணுவின் நிறம் கறுப்பாகுமாறு வெதுப்பும்படி. "கடல் கடைந்திடச் செல்லுறூஉம் வெள்ளைமால் கடுப்ப" (காஞ்சிப்புரா). பிதிகாரம் - மாற்றுப் பரிகாரம். எரியாமல் - வெறுக்காமல். அண்டர் அரசே - தேவதேவன் ஏகாரம் தோற்றத்தோடு பிரிநிலை. அவனே அரசு என்று கூட்டுக. இவ்வரலாறு எல்லா மாபுராணங்களாலும் பேசப்பட்டது.- (2) இது சிவபெருமான் பிரம விட்டுணுக்களின் போரினிடை அவர்களறியாத வண்ணம் அழற்பெருந் தூணாய் அடிமுடிதேட நின்ற இலிங்கபுராண வரலாறு குறித்தது. இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை பார்க்க. பரமொரு தெய்வம் - தங்களுக்குப் பரமாகிய அப்பாற்பட்டவொரு கடவுள். நிரவொலி.......தம்பம் - அழற்பெருந்தூணின் அளவு கடந்த பெருநிலை. - (3) இது கண்ணனுக்கு அருளிய வரலாறும், சிவன் எல்லாமாய் நிற்குநிலையும் குறித்தது. ஏக உருவாகி - முழுமுதல்வன் "ஓருரு வாயினை" (தேவா). மூவர் - அயன் - அரி - அரன். குறள் - வாமனன். ஆலிலைமேற் பாலன் - ஊழிவெள்ளத்தில் ஆலிலைமேற்கிடந்த திருமால். பரமாய - எட்டாத - அப்பாற்பட்ட. - (4) இது தாரகாசுர சங்கார வரலாறு குறித்தது. தாரகன் - தாரகாசுரன். கந்தபுராணத்தினுள் முருகப்பெருமானால் வதைக்கப்பட்ட தாரகன் வேறு. - (5) இது திரிபுர சங்கார வரலாறு குறித்தது. நிதனம் - நாசம்; அழிவு. அரணம் - காவலிடம் - அபயம். அரவம் கைஞாண் - ஆதிசேடனாகிய (வில்) நாண். அனல்பாய - தீயாகிய அம்புசெல்ல. மலை சிலை - மேருமலையாகிய வில். - (6) நீலநன்.......எரிகேசன் - இயமன். இருண்டமேனியும், வளைந்த பற்களும், எரி போன்ற மயிரும் உடையவன். எரிகேசன் - எரிபோன்ற சிவந்த மயிரையுடையவன். கேசம் - தலைமயிர். மாலை - பூமாலை. பாலன் - மார்க்கண்டேயமுனிவர்; உயிர் வவ்வு பாசம் - கால பாசம்; காலன் - காலத்தை அளந்து வருபவன். தொழுதோது கழல் - சூடு கழல் என்று தனித்தனி கூட்டுக. - (7) இது தக்கயாக சங்கார வரலாறு குறித்தது. உயர்தவம் - தக்கன் முன் செய்த தவம். உயர்வேள்வி - வேதங்களின் விதித்தலால் வேள்விப் பொதுவின் உயர்ச்சி குறித்தது. கமி - பொறுக்க. க்ஷமி என்னும் வடமொழியின் றிரிபு.- (8) இது ஒருகால் உலகிருணீங்க நெற்றிக் கண் விழித்த வரலாறு குறித்தது. மங்கை நங்கை - உமையம்மை. இருளோட - அம்மை ஒரு காலத்து விளையாட்டாக இறைவரது கண்களைக் கையினால் மூட அதனால் அக் கண்களாகிய சூரிய சந்திரர் மறைபட்டு உலகில் எங்கும் இருள்மூட, அந்த இருள் நீங்கி உலகம் ஒளிபெற்றுய்யும்படி. இருள் மூட மூட - இருள் மூடும்படி (கண்களைக் கையினால்) மூட. அலர்தர - விழிக்க. மதிபோல்.......அலர்வித்த - நெற்றிக் கண் நெருப்பாயினும் அதனை உலகுய்யுமாறு மதிபோலக் குளிர்ந்து ஒளிவீசும்படி விழித்த. "மலைமடைந்ததை விளையாடி" (கலயநல்லூர் - 4) என்ற நம்பிகள் தேவாரம் காண்க - (9) இது காமனை எரித்த வரலாறு குறித்தது. அஞ்சுகணையோன் - மன்மதன். நெற்றி ஒற்றை நயனம் சிவந்த - முன் பாட்டில் மதிபோல அலர்வித்தமைக்கு மாறாக அதனையே சிவக்க விழித்த என்க. சிவந்த - சினந்து விழித்த. - (10) இது மாலுக்குச் சக்கரமளித்த வரலாறு குறித்தது. அரக்கன் - சலந்தரன். ஆழி - சக்கரம்; ஆழியவன் - பாற் கடலில் பள்ளி கொள்பவன். சுடரடியான் முயன்று சுழல்வித்து - அடியினால் சக்கரமாகக் கீறி அதனையே சுழலச்செய்து. "செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடராழி" (நம்பி - தேவா - கலயநல் - 2). - (11) இது இராவணன் கயிலை யெடுத்துப் பட்ட வரலாறு குறித்தது. இவ்வரலாறு எல்லாப் பதிகத்தும் இறுதிப் பாட்டிற் போற்றப்படினும், இதனுள் நேரிற் கண்டோர் கூறுமா போல விரித்