பொதிகை; வைப்புத் தலம். மாத்தூர் - ஆமாத்தூர். - (11) முந்தித்தானே முளைத்தான் - "முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி" (ஆலவாய் - தாண்). சிந்தை.......என்பார் - மனம் வாக்குக் காயம் என்ற முக்காரணங்களாலும் ஒன்றுபட வழிபடுவோர். சிந்தை வெள்ளப் புனலாட்டி - ஆனந்தமெனுஞ் திரு மஞ்சன மாட்டி" (வாயிலார் - புரா - 8). "விளைத்தவன் புமிழ்வார் போல" (772); சொன்மாலை - சொல்லாகிய மாலையும், சிறப்பாய் எடுத்துச் சொல்லப்படும் பூமாலையுமாம். என்பார் - துதிப்போர். பாவநாசமே - பாவங்கள் நாசமாகும். ஏகாரம் தேற்றம். "பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்.....போற்றா நில்லே" (ஆரூர் - தாண் - 7). என்பார் பாவநாசமே - என்று உலகரை அறிவுறுத்துதலின் அதனை மேற்கொண்டு உலகர் பரவ நின்றது இப்பதிகம் என்பார் ஆசிரியர் இதனைப் பார் பரவும் பாவநாசப் பதிகம் என்றருளினர். பொது - சரக்கறைத் திருவிருத்தம் Xதிருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| விடையும் விடைப்பெரும் பாகா!வென் விண்ணப்பம் வெம்மழுவாட் படையும் படையாய் நிறைத்தபல் பூதமும் பாய்புலித்தோல் உடையு முடைதலை மாலையு மாலைப் பிறையொதுங்குஞ் சடையு மிருக்குஞ் சரக்கறை யோ! வென் றனிநெஞ்சமே. 1 விவந்தா யடிகழ லெந்தாயென் விண்ணப்ப மேலிலங்கு தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல் சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. |
11 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இறைவரை நோக்கி நேர்பட நின்று பன்முறையும் அறை கூவும் திருப்பதிகம் என்பது ஆசிரியர் அறிவிக்கின்றவாறு. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) விடையும் - கோபமுடைய. "சின விடையேறு"; படையாய் நிரைத்த - படைகளை நிரையாக ஏந்திய. படைகளாக என்றலுமாம். முடைதலை - முடைநாற்றமுடைய மண்டை ஓடு. என் தனி நெஞ்சம் படையும் பூதமும் உடையும் மாலையும் சடையும் கொண்டு இருக்கும் சரக்கறையாமோ? விடைப்பாகா? இது என் விண்ணப்பம் என்று முடிக்க. பாகா! - வெற்பா! - ஏந்தீ! - உரியாய்! - உண்டாய்! - தாராய்! - எய்தாய்! - ஏறீ! - விகிர்தா! - ஆளீ! - எந்தாய்! - இது என் விண்ணப்பம் என்று பலமுறையும் நேரே அழைத்துக் கூவுதலின் பன்முறையும் நேர்படநின்று அறைகூவும் திருப்பதிகம் என்றார் ஆசிரியர். - (3) தகுணிச்சம் - இயங்களின் ஒருவகை. - (6) வீழ் இட்ட - வீழ்து போலச் சரமாகத் தொங்கும். ஏழ் இட்டு - எழுச்சி தந்து. தாழ் இட்டு - தங்க வைத்து. - (8) கொடு கொட்டி - கொக்கரை - தக்கை - குழல் - தாளம் - வீணை - மொந்தை - இயங்களின் வகை. வடு விட்ட - குற்றமில்லாத. தடு குட்டம் - இறைவனடனத்தால் தலைத்தலை மயங்கிக் கலத்தல்; குணலைக் கூத்துப்போல. - (9) தண்டி - சேர்த்து. - (10) வேதித்த - தண்டித்த. சாதித்து - விளங்கி. - (11) விவந்து - வெளிப்பட்டு. குறிப்பு :- இப்பதிகம் தம் பொருட்டு அறைகூவி விண்ணப்பித்த கருத்து. |