பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்717

 

பொது - பசுபதித் திருவிருத்தம்

XI திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி
யேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையெனுங்
காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.

1

சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்க னிருபது தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- எம்மை ஆளும் பசுபதியே! நின்தாள் பரவி ஏம்பலிப்பார் கட் கிரங்கு; உன் பாதந் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமை இரங்கு; அடியார் தடுமாற்றம் நீக்கு; உன்பாத மிறைஞ்சுகின்றா ரருவினை யகற்று; நோயை விலக்கு; அவர் நடலைப்படாமை விலக்கு; மறவித் தொழில் மாற்று; பிணிதீர்த்தருள் என்று பலவாறும் விண்ணப்பித்தது.

குறிப்பு :- இப்பதிகம் அடியார்களின் பொருட்டு அறைகூவிச் செய்து கொண்ட விண்ணப்பம்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சாம்பல் - திருநீறு. தரையிற் புரண்டு - அடியார் படுக்கைச் சுகம் வேண்டாது தரையிற் படுக்கும் மரபு குறித்தது. "பூமிதேவி யுடன்கிடந்தாற்புரண்டாள்" (மறுமாற் - தாண்) ஏம்பலித்தல் - அவாவுதல். - (2) உடம்பை - உடம்பின்கண்; தொலைவித்து - பற்றுவிட்டு. அடும்பு - ஒருவகை மரம். சிவந்தபூவுடையது. - (3) தாரித்து - மேற்பூண்டு. பாரித்த - தாங்கிய. - (4) அருவினைச் சுற்றம் - வினையாகிய சூழல். சுற்றம் - சுற்றிச் சூழ்வது. வரைக்குன்றம் - யானை. இருபெயரொட்டு. குன்றம் போல்வது என உவமையாகுபெயர். பருவரை - பெரிய; பரிய. - (6) அடலை - துன்பம்.-(7) மறவி - மறத்தல். அறவைத் தொழில் - தீத்தொழில். அழிவு. பறவை - பறக்குந் தொழிலுடைய.- (10) பித்து - அன்பின் பெருக்குப் பித்துப்போன்ற தென்பது. பிதற்றுகின்றார் - என்றதுமிது. பிணி - மூலநோயாகிய ஆணவ மலம். பத்துற - பற்றுவிட்டு.

பொது - தனித் திருவிருத்தம்

XII திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.

1

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ?
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.

3