பக்கம் எண் :


732திருத்தொண்டர் புராணம்

 

பவத்தொடக்கு ஆம் - பவம் - பிறவி; தொடக்கு ஆம் - (பிறவியில் உயிரைப்) பிணித்தற்கு உதவும்; தொடக்குண்ணச் செய்யும். முன் பிறவி காரணமாகவரும் என்றுரைப்பாரு முண்டு.

இருவினைகள் தமைநோக்கி - செயல்புரிந்த அந்த உருவங்களைத் தேவ அரம்பையர் என்றாவது, பெண்கள் என்றாவது, காணாது இருவினைகளின் உருவமாகவே கண்டார் நாயனார் என்பது "புண்ணியங்காள்! தீவினைகாள்!" என்ற தேவாரத்தால் அறியப்படும். இருவினை - புண்ணிய பாவங்களைப் பயக்கும் நல்வினை தீவினைகள். தீவினை போலவே நல்வினையும் பிறவிக்குக் காரணமாதலின், பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போல, இருவினைகளையும் ஒன்றாகவே கடிவர் நல்லோர். உலக அனுபவங்களையும் உலகங்களையும், நல்லோர், காரிய உருவமாகிய அவ்வாறே கண்டு வைக்காது அவற்றின் காரண உருவமாகிய மாயையாகவே காண்பர். அவ்வாறு காணாது மாயையிற் பட்டுழல மனம் வைக்கும் உயிர் பிறவியிற் சேரும் என்றும், அதன் பயனாய பிறவியிற் சேர்ந்து இருவினையின்பயன் பெற்று உழலும் என்றும் காண்பர். ஆதலின் நல்லோர் உலகின் மேன் மனம் வைக்காது ஒதுங்குவர் என்பார் "மாயப் பவத் தொடக்கா மிருவினைகள் தமைநோக்கி" என்றார்.

குறை - உபகாரம்; வேண்டுங்காரியம் என்ற பொருளில் வந்தது.

திருவாரூர் அம்மானுக்கு ஆளானேன் - திருப்புகலூரிற் பாடிய இப்பதிகத்தில் புகலூரைக்கூறாது "திருவாரூர் அம்மானுக்கு ஆளானேன்" என்ற தென்னையோ? எனில், அவ்வரம்பையர்களை நோக்கி, "நீவிர் தேவ அரம்பையர்; தேவ அரசனாகிய இந்திரனுக்குக் கீழ் ஏவல் செய்வோர். அவ்விந்திரன்றானும் திருவாரூரிறைவரது அடியார்களிடம் வந்து ஏவல் செய்யக் காலம் பார்த்திருப்பவன்; நானோ, உமது தலைவனுக்குத் தலைவராகிய ஆரூர்ப் பெருமானிடம் நேரே ஆட்செய்யப்பெற்று, உமது தலைவன் வாயில்காத்திருக்கும் தேவாசிரியனில் கூடியிருக்குந் திருக்கூட்டத்துள் ஒருவன். உமது செயல் என்னிடம் செய்தல் வேண்டா" என்று தமது தலைவரின் பெருமை பற்றிக் குறிப்பிட்டவாறு. மேலும் அவ்விந்திரனாற் தேவருலகத்திலும் பூவுலகத்திலும் பூசிக்கப்பட்டவர் தியாகேசர் என்பதும் குறிப்பு.

அலையேன்மின் நீர் - விணே நீவிர் அலைதல் வேண்டா. உம்மால் இடர்ப்படமாட்டேன். "இடறேன் மின்" "அலையேன்மின் - நீவிர் என்னை அலைத்தல் - வருத்தல் - வேண்டா என்றுரைப்பாரு முண்டு." நும்மாலாட் டுணேன், ஓட்டந்தீங் கலையேன் மின்னே" "பகட்டன் மின்னே" என்ற தேவாரங்கள் காண்க.

என்று - என்ற கருத்துக் கொண்டு.

423

திருவாரூர்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
         புண்ணியங்கா டீவினைகா டிருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
         கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
         தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றே
         னிடையிலேன் கெடுவீர்கா ளிடறேன் மின்னே.

1