| மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி நாள்வாயு நும்முடைய மம்ம ராணை நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர் நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர் ஆள்வானைக் கடுகச்சென் றடைவே னும்மா லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மாயப் பவத் தொடக்காம் இருவினையின் உருவமாகிய அரம்பையர்களை நோக்கி "உம்மால் ஆகும் குறை எனக்கு ஒன்றுமில்லை. நான் திருவாரூர் அம்மானுக்கு ஆள். நீவிர் அலையேன்மின்" என்று கூறிய வகையால் உலகர்க்கு உபதேசித்தது. ஆசிரியர் 1688-ல் காட்டியபடி. புண்ணியங்காள்! தீவினைகாள்! ஐம்பெருமா பூதங்காள்! சுவையொளியூ றோசைநாற்றத் துறுப்பினது குறிப்பாகுமைவீர்! விறலே! மிக்க சோர்வுபடு சூட்சியமே! சுகமே! மதமானமே! யார்வச் செற்றக் குரோதமே! உலோபமே! பொறையே! இடர்பாவ மெனமிக்க வேட்கை வெறுப்பே! நல்குரவே! செல்வே! வெகுட்சியே! மகிழ்ச்சியே! பஞ்சேந்திரிய முகரிகாள்! என்று இவ்வாறு உலகுயிர்களைக் குணஉருவங்களாகப் பகுத்துக காணும்படி ஆணையிட்டருளியது. பதிகப் பாட்டுக்குறிப்பு :- (1) பொய்ம் மாயப் பெருங்கடலில் - புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே - இதனை இம்மாயப் பவத் தொடக்கா மிருவினைகள் என்று பொருள் விரித்தனர் ஆசிரியர். மாயப் பெருங்கடல் - உலக பாச பந்தங்கள். புலம்பா நிற்றலாவது - பிதற்றப் பட வருதல். மாயப் பெருங்கடல் - புவன போகங்கள். அரித்துத் தின்னுதலாவது - நோய் கொண்டவாறு சிறிது சிறிதாக நுகர்தல். அடங்க - அலையாது நிலைபெற. உழிதருதல் - சஞ்சரித்தல இடை - வேறு குறை. இடறேல் - அலையேல். - (2) ஐம்பெருமா பூதங்காள் - ஐம்பூதக் கூட்டினாலாகிய உடலும், காரணங்களும், குண முதலியனவும். ஒருவீர் வேண்டிற் றொருவீர் வேண்டீர் - "மாறிநின் - றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழி" (திருவா). "ஒரு புல னுகரும் போதங் கொன்றிலை யொன்றின் பாலும், வருபயன் மாறி மாறி வந்திடு மெல்லா மாறு" (சித்தி - 2 - 94); தருக்கேல் - தருக்கித்திரிதல் வேண்டா. தடைப்படுவேனாகக் கருதி - எனது இறை பணியினின்று விலக்கப் படுவேனாக எண்ணி.- (3) சில்லுருவிற் குறி நிறுத்தி - சிற்றுருவைக் குறிக்கோளாகக் கொண்டு. சில்லுரு - அழிவுபடும் சிறுமையுடைய உரு. பல்லுருவில் தொழில்பூண்ட - பலப்பல மாயாவிகார உருவங்களை எடுத்துத் தொழில் செய்தலை மேற்கொண்ட; பளகீர் - பளகு - குற்றம். "பளகறுத் துடையான் கழல் பணிந்தில்லை" (திருவா - சத - 35). சுடர் மூன்று - ஞாயிறு - திங்கள் - தீ என்ற இவற்றின் சூக்குமப் பிழம்பு; உருவம் மூன்று - இவற்றின் உருவம்; தூ நயனம் - இவையே தமது கண்களாகக் கொண்ட நிலை; நமைப்புண்ணல் - வருத்தப் படுதல். கமைத்து - மன்னித்து. இழித்தற்கண் வந்த குறிப்பு மொழி. இந்நாள் ஆங்கில மரபிலும் Excuse me என்னும் வழக்கும் காண்க. நடமின் - அகன்று போமின். - (4) உன்உரு - தன்மாத்திரைகள். உறுப்பினது - பொறிகளினது; குறிப்பு - வெளிப்படுக்கும் குறியீடு பெறக் காட்டும் இலட்சியம். என் சிந்தை புகுந்து தன் உருவைத் தந்தவன் - என்க. தன்உரு - சிவத்துவம். தலைப்படுவேன் - அடைவேன். "எல்லையினைத் தலைப்பட்டார்" (1075). துலைப்படுப்பான் - தூரமாக்குதற்கு. பான் - பொருட்டு என்ற பொருளில்வரும் வினையெச்ச விகுதி. - (5) துப்பு - அறிவு; அனுபவிக்கப்படும் பொருள் என்றலுமாம். சூட்சியம் - பலக் குறைவு. ஒப்பனையைப் பரவித் |