பக்கம் எண் :


734திருத்தொண்டர் புராணம்

 

தல் - தம் போலாக்குதலைக் கருதுதல். உழலுதல் - அலைதல். வைப்பு - சேமநிதி. வைகல் - சோழநாட்டுத் தலம். மாடக் கோயிலுமாம். ஒட்டந்து - ஒட்டந்தந்து என்றது ஒட்டந்து என மருவிற்று. இது பற்றியே "சூழலவிழ விடை நுடங்க ஒடுவார்" (1686) என்றார். 7, 8, 9-ம் பார்க்க. (6) மதம் - மானம் - ஆர்வம் - செற்றம் - குரோதம் - உலோபம். இவை காம முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைக் குற்றங்கள். பொறை - அவற்றின் மாறுபட்ட குணம். தீமையும் நன்மையும் கூறியவாறு; அவற்றுள் தீமையின் மிகுதிப்பாடும் குறித்தபடி. பொங்கும் உள்ளம் கவர்ந்தோங்கி மேலெழும். செலுத்துண்ணேன் - கொண்டு செலுத்தப்பட மாட்டேன். - (7) இடர் - பாவம் என மிக்க துக்கம் - இடரென்றும் அது பற்றி வரும் பாவமென்றும், அதன் விளைவாக வரும் மிக்க துக்கமென்றும் வருவன. இடர் - தீமை செய்தல். வேட்கை - விருப்பு. குடைகின்றீர் - அமைதியாக நிற்க வொட்டாமல் உள்ளிருந்து அலைக்கின்றீர். அமையாதே - போதாதோ. - (8) விரைந்தாளும் நல்குரவு - விரைந்து ஆட்படுத்தும் நல்குரவு என்றது அதன் வலிமை குறித்தது. நல்குரவு வந்தோர் விரைந்து நலப்படுவது காணப்படும். நல்குரவு - செல்வம் (செல்வ நிலை) - வெகுட்சி - மகிழ்ச்சி. வெறுப்பு - மாறுபட்ட குணநிலைகள். ஒட்டந்து பகட்டேன்மின் - "ஒடுவர் - மார வேளுடன் மீள்வர்" (1686) - (9) மூள்வாய் தொழில் - ஒன்றன்பின் ஒன்றாகக் காரண காரியமாய்த் தொடர்ந்து வரும் தொழில் உடைய. முகரி - ஆரவாரஞ் செய்வோன். மம்மர் - மயக்கம். நீள்வானம்...தூண் - வானத்து அண்டகோளகைகளை யெல்லாம். ஒருவழிப்படுத்தி நிறுத்தும் சத்தி நெடுந் தூண் எனப்பட்டது. வானநூல் நுட்பம். பாதாளக் கரு - மேலே வானந் தாங்கியதுபோலக் கீழே உலகங்களைத் தாங்கும் சத்தி. (10) துப்பறை - அனுபவிக்கப்படு பொருள். மிகை செலுத்துதல் - செருக்குப் பற்றிய ஆணை செலுத்துதல். தருக்கி மிக...அடி எடுத்து - உமது செருக்குச் செயலையும் அடக்குவான் என்பது குறிப்பு. இடையிலேன் - இடைவிடாது பற்றினேன்.

குறிப்பு :- புவன போகங்களை நன்மை தீமையாகிய குண உருவங்களாகக் கண்டு, நீவிர் உலகங்களை எல்லாம் அலைத்து ஆனை செய்கின்றீர். உமக்கு உலகமெல்லாம் போதாதோ? அம்மட்டில் அமையாதோ? அவ்வாறே என்னிடம் வந்து ஆணை செலுத்த முயல்கின்றீர்!; யானோ திருவாரூர் அம்மானுக்கு ஆளாகி அவன் பணியில் இடையறாது நிற்பேன்; உம்மால் ஆட்டுண்ணேன். நீவிர் அலையாதீர். போமின்! என்று உலகருக்கு எடுத்துக் காட்டிய நல் உபதேசம் இத்திருப்பதிகம். "பெண்ணாகி வந்தொரு மாயப் பிசாசம்" (பட்டினத்தார்) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. இவை மகளிரிழிபு கூறுந் துணையன்றி எல்லாப் புவன போகங்களாகிய மாயைத் தொடக்கினின்றும் தப்பும் வழி கூறியபடியாம்.

1689.

மாதரவர் மருங்கணைய வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங் கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா வோருணர்விற் பெரியவரைப் பெயர்விக்க
யாதுமொரு செயலில்லா மையிலிறைஞ்சி யெதிரகன்றார்.

424

(இ-ள்.) மாதர் அவர்...எய்தி - தேவ அரம்பையர்கள் அந் நாயனாரது பக்கலில் வந்து; மதன வசம்...செய்திடவும் - காம வயப்பட்ட காதலையுடையார்கள் செய்யும் வஞ்சனைகளை யெல்லாம் செய்திடவும்; பேதமிலா..பெயர்விக்க - தம்நிலையினின்றும் பிறழாத ஒருமைப்பட்ட உணர்வினையுடைய பெரியோ ராகிய நாயனாரை அந்நிலையினின்றும் சித்த நிலையை மாற்றுதற்கு; யாதும் ஒரு செயல்