பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்735

 

இல்லாமையில் - வேறு எவ்விதமானசெயலும் செய்ய இயலாமையால் இறைஞ்சி எதிர் அகன்றார் - வணங்கி அங்கு நின்றும் நீங்கி விட்டனர்.

(வி-ரை.) அவர் - "உம்மாலிங் கென்னகுறை யுடையேன் - நீர் அலையேன் மின்" என்று தாண்டகம் புகன்ற அவர் என முன்னறிசுட்டு. மருங்கு அணைய வந்து எய்தி - முன்னர்க் "கூடுவார் போன்றணைவார்" என்றது பக்கத்து வருவார்போல வந்தது. இங்குக் கூறியது உண்மையிற் பக்கத்திலே வந்த செயலாம்.

மதனவசக் காதலவர் - காம விகாரமாகிய மயக்கினுட்பட்ட பிறர் எல்லாம். இதற்கு இவ்வாறன்றி அந்த அரம்பையர் என்பாருமுண்டு. மதன் அவசக் காதல் - என்று பிரித்துரைத்தலுமாம். காதலவர் - காதலினுட் பட்டோர்.

புரிந்தொழுகும் கைதவங்கள் - (காமத்தின் வயப்பட்டோர்) செய்யும் தீயொழுக்கத்துட்பட்ட கீழ்மைச் செயல்கள். இவை மேல் 1686-ல் உரைத்தவற்றின் வேறாயினவை. மேற்கூறியவை சற்றுத் தூரத்தின் விலகி நின்று காம இச்சையைத் தூண்டச் செய்யப்படுவன; இங்குக் கூறியவை பக்கத்தில் அணுகிச் செய்யப்படும் காமச் சாகசச் செய்கைகள். இவை சொல்லவுந் தகாதன என்பார் முன்னவற்றினின்றும் வேறு பிரித்தும், "மதனவசக் காதலவர் புரிந்தொழுகுங் கைதவங்கள்" என்று பொதுப்படவும் கூறினார். இதற்கு இவ்வாறன்றி அவர் என்பதற்கு வாகீசர் என்று கொண்டு, "மன்மதனால் தந் நிலைமையிழக்கும் விகாரத்தை அவ்வாகீச மாமுனிவர் விரும்பி அம் மயக்க வழியிற் செல்லுவதற் கேதுவான வஞ்சனைகள்" என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள்.

செய்திடவும் - உம்மை உயர்வு சிறப்பு.

பேதமிலா ஒர் உணர்விற் பெரியவர் - பேதமிலாமை - நிலைபிறழாத தன்மை. வைத்த குறியினின்றும் மாறாதிருத்தல். "சித்த நிலை திரியாது" என்ற நிலை. ஒர் உணர்வு - பிறிதெங்கும் செல்லாது திருவடியில் ஒன்றுபட்ட உணர்வு. "ஒன்றியிருந்து நினைமின்கள்" (தேவா). ஒர் - நினைக்கின்ற என்றலுமாம். பேதமிலா உணர்வு - ஒர் உணர்வு என்று தனித்தனி கூட்டுக. பேதமிலா - என்பதற்கு அரம்பையர் செயல்களினாற் பேதிக்கப்படாத என்றுரைப்பாரு முண்டு.

பெரியவர் - பேதமிலா ஒருணர்வுடைமையாற் பெரியவர் என்பது குறிக்க உடம்பொடு புணர்த்திச் சிறப்பித்தார். "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்) என்ற கருத்து இங்குச் சிறப்பிற் காணத் தக்கது.

பெயர்வித்தலாவது தந் நிலையினின்றும் மாறச் செய்தல்.

யாதும் ஒரு செயல் இல்லாமையில் - எதுவும் செய்ய மாட்டாமையால். செயலும் என்று முற்றும்மை விரிக்க. யாதும் - எவ்வகையானும்.

எதிர் - எதிரினின்றும் - திருமுன்பு நின்றும்.

எதிர் நின்றார் - என்ற பாடம் பிழை.

பேதமிலா ஒருணர்விற் பெரியவர் என்ற இடத்து நாயனார் எல்லாவற்றையும் சிவமாகக் காணும்போறு பெற்றமையால் அவருக்கு மண்-பெண் - பொன் எல்லாம் பேதமின்றிச் சிவமாகத் தோன்றுதல் இயல்பு என்று விசேடவுரை காண்பாரு முண்டு. அவர் பேதமிலா என்றதற்கு உலகப்பொருள் எல்லாம் பேதமின்றிச் சிவமாகக் காணும் என்று கொண்டனர். அப்பர் இங்கு அரம்பையரைச் சிவமாகக் காணாது மயக்குமியல்புடைய ஐம்பூத விகாரங்களாகவும் குணவுருவங்களாகவும் கண்டார் என்பதறியப்படுதலின் இதன் பொருத்தம் ஆராயத்தக்கது.

424