வந்து பலவாறும் அசம்பாவிதமாய் முடியும். மேலும் உடலின் அபிமான நினைவு முற்றும் மறந்து இறைவனது நினைவில் தீயினடுவுள் ஏழுநாள் இருந்த நாயனாரது பெருமைக் கிழுக்காகப், பலவாறும் இவ்வரலாற்றில் சிங்கமாய் இறைவர் உண்டபோது நாயானர் "வலிக்குதே" என்றதாகவும், இறைவர் "இனிக்குதே" என்றதாகவும் பலபட அசம்பாவிதங்களும் கேட்கப்படுகின்றன. இதுவுமொரு பொருளாகக் கொண்டு நாயனாரது திருநாளன்று திருப்புகலூரில் நாயனாரது திருநாளில் இறைவரது அருட்குறியைச் சிங்க உருவமாகச் சித்திரித்து வைத்தலும், அவ்விடத்து விளக்குகளை யெல்லாம் அவித்து முழு இருளில் நாயனாரை எழுந்தருளுவித்துத் திருக்காப் பிடுதலுமாகிய தவறான முறைகளும் வழக்கமாகக் கொண்டாடப்படுகின்ற நிலை பெரிதும் வருந்தத் தக்கதாம்!. பேரொளி உருவமாய்ச் சிவானந்த ஞான வடிவேயாகி அமர்ந்ததனை இருளில் அமர்ந்ததாகக் காட்டுவது சிறிதும் பொருந்தாது. ஞானம் எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் இருளுருவமாகாது; அதன் மறுதலையேயா மென்க. அன்பர்களும் அதிகாரிகளும் இவற்றைச் சிந்திப்பார்களாக.1 சேவடிக்கீழ் அமர்ந்திருந்தார் - "உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்து" என்றதனால் சிவானந்த ஞானவடிவு பெற்றநிலை ஆண்ட அரசுகளுக்கும், அதனைத் தரும் நிலை இறைவருக்கும் சார்ந்தனவாதலின் சேவடிக்கீழ் என்றார். அமர்ந்திருத்தலாவது - மீளாத நிலையை அடைதல். அரசெய்தினார் - என்பதும் பாடம். 427 திருப்புகலூர் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| எண்ணுகே னென்சொல்லி யெண்ணு கேனோ வெம்பெருமான் றிருவடியே யெண்ணி னல்லாற் கண்ணிலேன் மற்றோர் களைக ணிலலேன் கழலடியே கைதொழுது காணி னல்லால் ஒண்ணுளே யொன்பது வாசல் வைத்தா யொக்க வடைக்குபோ துணர மாட்டேன் புண்ணியா வுன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 1 அங்கமே பூண்டா யனலா டினா யாதிரையா யானிழலா யானே றூர்ந்தாய் பங்கமொன் றில்லாத படர்சடையினாய் பாம்போடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தி னஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே யுன்னடிக்கே போது கின்றேன் றிருப்புகலூர் மேவிய தேவ தேவே. 2 ஒருவனையு மல்லா துணரா துள்ள முணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இருவரையு மூவரையு மென்மே லேவி யில்லாத தரவறுத்தாய்க் கில்லே னேலக் கருவரைசூழ் கான விலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையா யுன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- புண்ணியா - சிங்கமே - பொருளாவாய் - போரேறே - புரிசடையாய் - பொருவரையாய் - பூம்புகலூர் மேவிய புண்ணியனே! உன் திருவடியே 1. | இதுபற்றி 766-ம் பக்கக் குறிப்புகள் பார்க்க. |
|