பக்கம் எண் :


744திருத்தொண்டர் புராணம்

 

யான் அறிந்தபடி - என் அறிவின் அளவினுட் படுவதன்றாதலின் அறிந்த அவ்வளவேயன்றி முற்றிலுமன்று என்பதாம்.

கடி - மலர் - மென் - சே - அடிகள் - அடைமொழிகள் அருமைப்பாடு பெறப் பாராட்டிய திறங்காட்டுவன. மணமும், மென்மையும், செம்மைப் பண்பும் பொதுத் தன்மையாகக் கொண்ட உவமம் பற்றிய உருவகம்.

கைதொழுது - தொழுது என்றலே அமையுமாயினும் கைதொழுது என்றதுகையார - கைபொருந்தி நிறைவாக - என்ற குறிப்புத் தருவது. முயற்சியினை - என்றதனால் மனத்தாலும், மொழிகின்றேன் என்றதனால் வாக்காலும் தொழுதல் கூறப்பட்டன.

முடிவில் புகழ்த் திருத்தொண்டு - முடிவில் புகழாவது ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கினாற் போற்றப்படும் அளவில்லாத புகழ். "மங்கையர்க்கரசி" என்ற திருப்பதிகம் 2, 4, 6, 8, 10, 11 திருப்பாட்டுக்கள் பார்க்க.

"பிள்ளை யார்தந் திருவாக்கிற் பிறத்த லாலே தாலமுமுன்
 புள்ள பாசம் விட்டகல வொழியாப் பிறவி தனையொழித்துக்
 கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்;
 வள்ள லார்மற் றவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்?"

(திருஞான - புரா - 983)

என்றபடி, ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கில் ஒருமுறை பிறந்தால் முத்திப்பயன் பெற வுளதாகுமாயின், இவ்வாறு பெருமை பிறங்கப் பலமுறையும் பாராட்டப்படின் அப்புகழின் பெருமை அளவும்படுமோ? என்பார் முடிவில் புகழ் என்றார்.

திருத் தொண்டின் முயற்சியினை - அவர் செய்த திருத்தொண்டின் றிறத்தாற் கூறாது, முயற்சித்திறம் பற்றியே மேல் சரிதங் கூறுகின்றமை குறிப்பு. திருத்தொண்டின் நிகழ்ச்சி ஒவ்வோர் காலம் பற்றி நிற்க, முயற்சியானது அவ்வாறன்றி எஞ்ஞான்றும் இடைவிடாது நிகழும் பெருமை குறித்தவாறுமாம். தேவாரப் பதிகக் கருத்தும் காண்க. "பூசலார்த நினைவினை யுரைக்க லுற்றாம்" (பூச - புரா - 1) "நினைப்பினாற் கோயிலாக்கி" (மேற்படி 1618) முதலியவையும் காண்க.

அடியேனென் - பான் - முனிவன் - முயற்சியினி - என்பனவும் பாடங்கள்.

429

நாடு, நகரம், திரு அவதாரமும் வளர்வும்

சரிதச் சுருக்கம் :- நல்லொழுக்க நிறைந்த குடிகள் நிறைந்த விளங்கியது திருமுனைப்பாடி நாடு; அது கடலூர் சில்லாவின் ஒரு பகுதியாகும். அந்நாட்டினிற் பெண்ணையாறு பாய்ந்து வளஞ் செய்யும் வயல்கள் சிறந்து விளங்குவன; வாழை - கமுகு - நெல் முதலிய வளங்களும் வாவிகளும் சோலைகளும் அணிபெற வோங்குவன. சைவ சமய பரமாசாரியர் களான திருநாவுக்கரசு நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்தருள உள்ளதாகிய பேறுபெற்றது அந்நாடு என்னில் அதன் பெருமை நம்மாற் சொல்லும் தன்மையுடையதாமோ?.- இத் திருநாட்டில் பலவூர்களும் மேன்மையுடையன; அவற்றுள்ளே தெய்வச் சைவத் திருவினைப் பெருக்கச் செய்யும் என்ற காரணக் குறிப்புப்பட வழங்கப்படுவது திருவாமூர் என்ற நகரம். அதனுள் பெருமாடங்கள் ஒங்குவன; குற்றமற்ற அறவொழுக்கங்களே நிகழத், தீங்கு நெறிகள் நீங்குவன - அத் திருநகரத்தில் எல்லாவிதமான நலங்களினும் வழுவாத நல்லொழுக்க முடைய குடிகளுள்ளே மேன்மையுடைய வேளாளர் குலத்திலே, பெருமையுடைய குறுக்கையர்குடி விளங்குவதாகும். அக்குடியில் தோன்றி இல்லறம் புரிந்து, விருந்தும் சுற்றமும் சூழ அளிக்கும் பெருஞ்