பக்கம் எண் :


746திருத்தொண்டர் புராணம்

 

இறைவர் சூலைதந் தாட்கொள்ளச் சைவத்திற் சேர்ந்தது

"திருநாவுக்கரசர்" ஆயினமை

இப்பால், திலகவதியார் பெருங் கவலையடைந்து திருவதிகைத் தவத்தையடைந்து சிவபெருமானுக்குரிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் தமது தம்பியார் பரசமயக் குழி வீழ்ந்ததற்கு வருந்தி, அவரை அக்குழியினின்று மெடுத்தருள வேண்டுமென்று பலமுறை தமது பெருமானிடம் விண்ணப்பம் செய்துகொண்டனர். இறைவர் அவரது கனவிற்றோன்றி "உன் மனக்கவலை ஒழிக. உன் உடன் பிறந்தான் முன்னே ஒரு முனிவனாக நம்மை யடையத் தவஞ் செய்தனன். அவனை இனிச் சூலைநோய் தந்து ஆட்கொள்வோம்" என்று அருளினார். அவ்வாறே கொடிய சூலைநோய் தருமசேனர் வயிற்றினிடைப்புக்குக் குடைந்து மிகவருத்தி மயக்கியது. அது சமணர்கள் செய்த மணி மந்திர மருந்துகளாற் றீராதாக அனைவரும் கைவிட்டனர். தருமசேனர் தமக்கையாராது நினைவுவர அவர்பால் தமது சமையல் ஏவலாளனை அனுப்பினர். அவன் போய் அறிவிக்கத் திலகவதியார், "உன்னுடனே, நன்றறியா ரமண்பள்ளி நண்ணுகிலேன் என்று அவனிடம் சொல்க" என்னவே, அவனும் அவ்வாறே வந்தறி வித்தனன். அதன்மேல் அவர் ஈசர் அருள் கூடுதலால், தாமே சென்று திலகவதியாரையடையும் துணிவுகொண்டு சிறது ஊக்கம் பெற்றுப், பாயும் குண்டிகையும் பீலியும் ஒழிய, வெண்புடவை சுற்றிக் கொண்டு, பிறர் காணாத வகையால், இரவில் சென்று திருவதிகையை அடைந்தனர். திலகவதியம்மையாரது திருமடத்தில் சேர்ந்து அவருடைய திருவடிகளில் நிலமுற வீழ்ந்து வணங்கி, "நமது குலஞ்செய்த நற்றவப் பயன்போன்ற வீரே! கொடுஞ் சூலையினால் வருந்தியடைந்தேன்; நான் உய்ந்து கரையேறும் வழி உரைத்தருள்வீராக" என்று வேண்டிக் கிடந்தனர். அவரை நோக்கி அம்மையார், இறைவரது திருவடிகளை எண்ணி, "உட்கோளில்லாத பரசமயக் குழியில் விழுந்து அறியாது துயருழந்தீர்; எழுந்திரீர்" என்று மொழிந்து, "இது சிவபெருமான் றிருவருளேயாகும்; அடி அடைந்தார்களைப் பாசம்போக்கிக் காக்கும் அவரை யடைந்து பணி செய்வீராக!" என்றருளிச் செய்தனர். அவரும் அதனை ஏற்று இசைந்து நிற்க, இறைவரது பேரருளை நினைத்து, திருநீற்றைத் திருவைத்தெழுத்தினை ஒதிக் கொடுத்தருளினர். அவரும் வணங்கிப் பெருவாழ்வு வந்தது என ஏற்றுத் திருமேனி நிறைய அணிந்துகொண்டு, அம்மையாரின் பின்பு போதருவாரயினர். அப்போது திருப்பள்ளியெழுச்சியாகிய நேரமாதலின் அம்மையார் இதற்குரிய திருமெழுக்கும் தோண்பும் கொண்டு, தம்பியாரையும் உடன்கொண்டு திருவீரட்டானேசுவரர் திருமுபுகொண்டு சென்று புகுதவிட்டனர். அங்கே திருவருளினாலே தமிழ்மாலை சாத்தும் உணர்வு வர, அவர் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொக்கும் திருப்பதிகத்தினைப் பாடி இறைவரைத் துதித்தருளினர். சூலையும் நின்ற நிலையே நீங்கியது கண்டு அவர் சிவபெருமானது பெருங் கருணைத் திறத்தினை வாழ்த்தி வணங்கி நின்றார். அவரது வாக்கின் வளங்கொண்டு அவருக்கு திருநாவுக்கரசு என்ற பெயர் எங்கும் என்றும் வழங்குவதாக என்று அசரீரி மொழியால் இறைவர் அருள் புரிந்தனர். திருநாவுக்கரசர் தம்மைப் பிழை நீக்கி ஆட்கொண்ட இறைவரது பெருங்கருணைக் கடலுள் மூழ்கித் திளைத்தனர். அது முதல் அவர், மனம் வாக்கு உடல் என்ற முக்கரணங்களாலும் உள்ளமுருகிச் சிவபெருமானது பணி செய்து வருவாராயினர். தமது இச்சை நிரம்ப வரம்பெற்ற தாபதியாராகிய திலகவதியாரும் இறைவரது பெருங்கருணையை வியந்து துதித்து வாழ்ந்தனர்.

இதனைத் தெரிந்த பாடலிபுத்திர நகரத்து அமணர், பொறாமை மேற்கொண்டு, "சூலை நீங்கப் பெறாது, சைவராகித் தருமசேனர் உய்ந்தனர். நமது