பக்கம் எண் :


756திருத்தொண்டர் புராணம்

 

தொண்டை நன்னாடு சேர்ந்தது

இதுவோ?" என்று பாடிக், கண்ணீர் பெருக்கி வீழ்ந்து எழுந்து பரவசாமகிப் பரவினர். அவ்வாறே பைஞ்லிய்ற் றிருக்கோயிலிற் சென்று வழிபட்த் தங்கினர். பின்னர் இறைவர் எழுந்தருளியுள்ள பல மலைகளையும் நாடுகளையும் ஊர்களையும் சென்று வணங்கித் திருவண்ணாமலையை அணைந்து வழிபட்டுத் திருவருள் வழியே தொண்டை நன்னாட்டை அடைந்து முதலிற் றிருவோத்தூரிற் சேர்ந்து வழிபட்டு, பேற் சென்று காஞ்சிபுரத்தை அடைந்தருளினார். அடியார்கள் நகரையலங்கரித்து எதிர்கொள்ளப் புகுந்து, திருவேகம்பரது கோயிலை யடைந்து வணங்கி அம்மை தழுவக் குழைந்த மணி மேனிப் பெருவாழ்வை முன் கண்டு இறைஞ்சிக் கண்ணீர் பெருகப் பேரன்பு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தனர். "கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை" என்ற திருப்பதிகம் பாடித் துதித்தனர். கச்சித் திருமயானத்தையும் வணங்கினர். அங்குத் தொண்டு செய்து பலநாள் எழுந்தருளி யிருந்தனர். அங்கிருந்தபடியே திருமாற்பேறு முதலிய தலங்களைச் சென்று கும்பிட்டு "ஏகம்பன் காணவனென் னெண்ணத் தானே" என்று நினைந்து மீண்டு வந்து கச்சியில் கும்பிட்டிருந்தனர். பின்னர்த் திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருமயிலாப்பூர் முதலிய தலங்களை வணங்கித் திருவொற்றியூர் சேர்ந்தருளினர். அங்கு எழுத்தறியும்பெருமானகிய இறைவரைக் கண்ணிர்த் தாரை பெருக, மேனியிற்பொங்கி மயிர்ப்புளக மரும்ப, விதிர்விதிர்ப் புற்று விம்மி மனமுருக நின்று "வண்டோங்கு செங்கமலம்" என்ற திருத்தாண்டகம் பாடியருளி, வணங்கினார். அத்தலத்திற் சிலநாள் தங்கித் திருக்குறுந்தொகை, திருநேரிசை, திருவிருத்தம் முதலாகிய பதிகங்களைப்பாடியும் தொண்டு செய்தும், அணிமையில் உள்ள ஆலயங்களைப் பணிந்தும் வைகியருளினார். அங்கு நின்றும் திருப்பாசூரை வணங்கி "முந்தி மூவெயில்" என்னும் பதிகம்பாடிப் பழயனூர்த் திருவாலங்காட்டையடைந்து பணிந்து, வடதிசை மேற் சென்றருளிப் பல பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்று, திருக்காரிகரை பணிந்து, திருக்காளத்தியை அணைந்தனர்.

திருக்கயிலையாத்திரை

பொன்முகலித் தீர்த்தத்தில் மூழ்கித், திருமலையை வணங்கி, மேல் ஏறிக், காளத்தில் மலையெழு கொழுந்தாயுள்ள இறைவரை வீழ்ந்திறைஞ்சி, மனமும் கண்ணுங் களிப்பப் பரவசமாய்க் "காளத்தி யானவனென் கண்ணு ளாளே" என்னும் திருத்தாண்டகத்தாற் போற்றி, வழிபட்டு, அரிதிற் புறம்போந்து அத்திருமலையிற் றிருப்பணிகள் செய்தமர்ந்தனர். அங்குப் பணிந்த குறிப்பினாலே திருக்கயிலையில் இறைவர் எழுந்தருளியுள்ள பெருங்கோலத்தைச் சென்று நேரே காண வேண்டு மென்னும் காதல் கொண்டனர்.

காளத்தில் நாதரைத்தொழுது வடதிசை மேல் மிக்க விருப்போடும் செல்வாராய்ப் பெருமலைகளையும், கான்யாறுகளையும், அவை தொடர்ந்த நாடுகளையும் கடந்தபின் இறைவரது திருப்பருப்பதத்தை அடைந்தனர். விஞ்சையர், இயக்கர், கின்னரர், நாகர், காமசாரிகள் முதலிய தேவச்சாதியர்கள் நாளும் வந்து வணங்கும் அம்மலையை வணங்கிப் பதிகம்பாடி வழிபட்டனர்; அதன்பின் தெலுங்க நாட்டையும் கடந்து, கன்னட நாட்டையும் கடந்தனர். அதன்மேல் செறிந்த வனங்களையும், மலைப்பாதைகளையும், நாடுகளையும் கடந்து, மாளவ நாட்டையடைந்து கடந்து, அரியசுரங்களையும் தாண்டிச் சென்று, எங்கும் அறங்கள் நீடும் இலாட பூமியையும், கடந்து, பின், பெரிய மலைகள், ஆறுகள் காடுகள் முதலியவற்றைக் கடந்து மத்திம பைதிரத்தினைச் சேர்ந்தனர். கங்கை யாற்றைக் கடந்து காசித்தலத்தை விருப்பினோடு பணிந்தனர். தம்முடன் வந்தவர்களை அங்கு விட்டுத், தாம் தனித்துக் கயிலைமலை செல்வாராய்க் கங்கையைக் கடந்தனர் கற்சுரங்களும் வானமளாவ வுயர்ந்த காடுகளும் முதலிய