பக்கம் எண் :


758திருத்தொண்டர் புராணம்

 

தொகைகள் - திருநேரிசைகள் - திருவிருத்தங்கள்முதலிய பதிகங்களாற் போற்றிக் கைத்திருத்தொண்டும் சென்து அமர்ந்தருளினர்.

திருப்பூந்துருத்தி திருமடம் செய்தது

அங்கு நின்றும் திருநெய்த்தானத்தையும் திருமழபாடியையும் வணங்கித் திருப்பூந்துருத்தியை அடைந்தனர். "பொய்யிலியைக் கண்டேன்" என்னும் திருத்தாண்டகமும், "திருவடிக்கீழ் நாமிருப்பது" என்னும் திருக்குறுந்தொகையும்பாடி, "அங்குறையும் தன்மைவேண்டி நாம் அடிபோற்றுவதே" என்ற குறிப்புக்கொண்ட திருவிருத்தமும்பாடிப், பணி செய்தமர்ந்தனர். அங்கு இறைவனா ரருள் பெற்று உயர்ந்த திருமடம் ஒன்று செய்தமர்ந்தருளினர். அந்நாள்களில் பல்வகைத் தாண்டகம், தனித் தாண்டகம், அடைவு தாண்டகம், திருவங்கமாலை, முதலிய பதிகங்களைப் பாடியருளினர்.

ஆளுடையபிள்ளையார் எழுந்தருளியது - III மூன்றாவது முறை சந்திப்பு

பாண்டிநாடு சென்றது

அவ்வாறிருப்ப, நாயனாரைத் திருமறைக்காட்டிற் பிரிந்தருளிய ஆளுடைய பிள்ளையார், சமணர்களை வாதில் வென்று, திருநீற்றின் ஒளி விளங்கச்செய்து, பாண்டியரது கூன் நிமிர்த்துச், சோழ நாட்டுக்கு எழுந்தருளி, நாயனார் திருப்பூந்துருத்தியி லிருந்ததைக் கேட்டு அவர்பால் அணைதற்கு வருகின்றார். அதனை வாகீசர் கேட்டு எதிர் சென்றார். நகரின் புறம்பணையிற் சேர்ந்து திருக்கூட்டத்தின் நெருக்கினிடையே, ஒருவரும் காணா வகையால் நிலமுறப் பணிந்து, மறைந்த வடிவொடும் உட்புகுந்து, பிள்ளையார் ஏறிவரும் மணிமுத்தின் சிவிகையினைத் தாங்குவாரோடும் தாமும் தாங்கிப் பெறும்பேறு பெறும்படி நாயனார் தாங்கி வருவாராயினார். எவரும் அதனை அறியவில்லை. உடனே பிள்ளையாரது திருவுள்ளத்தில் வேறொன்று நிகழ, அவர் "அப்பர் எங்குற்றார்?" என்று வினவ, "அடியேன் முன் ஒப்பற்ற தவஞ் செய்ததனால் இப்பொழுது உமது சிவிகைதாங்கும் பேறு பெற்று இங்குற்றேன்" என்றருளினர். அது கேட்டுப் பிள்ளையார் பெரிதும் விரைந்து அஞ்சி இழிந்து, "இவ்வாறு செய்தருளிற்று என்னாம்?" என்று அரசுகளை இறைஞ்சினர். "திருஞானசம்பந்தர்க்கு வேறு எவ்வாறு செயத்தகுவது?" என்று நாயனார் எதிர் இறைஞ்சினார். இவ்வாறு இருவரும் கலந்தருளிப்போந்து, பொய்யிலியாரைப் பணிந்து, நாயனாரது திருமடத்தில் அளவளாவி அவரவருடைய போக்கும் வரவும் வினவிக்கேட்டு மகிழ்ந்தெழுந்தருளினர். பாண்டிமா தேவியாரது அன்பின்றிறத்தினையும், குலச்சிறையாரது பெருமையினையும் பிள்ளையார் உரைத்தருளப், பாண்டிநாட்டுக் கெழுந்தருள நாயனார் திருவுளங்கொண்டருளினர். பெருந் தொண்டை நன்னாட்டிற் றலங்களுக்கு எழுந்தருளும்படி அரசுகள் உரைத்தருள அவ்வாறே பிள்ளையாரும் பூந்துருத்தி தொழுது புறப்பட்டருளினர். நாயனாரும் இறைவரிடம் அருள் விடைகொண்டு புறப்பட்டுத், தென்றிசை போய்த் திருப்புகலூர் பணிந்து, மதுரைத் திருவாலவாய் சேர்ந்தனர். திருந்தியநூற் சங்கத்துள் இருந்து தமிழாராய்ந்தருளிய பெருமானது திருமுன்பு சேர்ந்து மகிழ்ந்து பேரானந்த இன்பத்தில் மூழ்கி, "முளைத்தானை" என்ற திருத்தாண்டகம் பாடிப் போற்றிக் களிசிறந்தார். மங்கையர்க்கரசியாரும், அவராற் பேறுபெற்ற பாண்டியனாரும், குலச்சிறையாரும் வந்து நாயனாரை அடிபோற்ற, அங்கு எழுந்தருளி, நேரிசை - தாண்டக முதலிய தமிழ்களைப் பாடியருளியிருந்தனர். அங்கிருந்து சென்று திருப்பூவணத்தை வழிபட்டு "வடிவேறு திரிசூலம்" என்ற திருத்தாண்டகத்தால் துதித்துப் போய்த், திருவிராமேச்சுரத்தை அடைந்து வழிபட்டுத் திருநேரிசை முதலான பதிகங்களைப் பாடியமர்ந்தனர். பின்னர் அங்கு நின்றும் திருநெல்வேலி, திருககானப்பேர் முதலாகிய தலங்களை வணங்கினார். எப்போதும் மனம் கசியக், கண்ணீர் வழிய, இடைவிடாது சிவனடி