பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்847

 

இரண்டில் ஒன்றைக் கொண்டு மிக விரைந்து வந்து, சேர்ந்து பரிகலத்திற் படைத்து, மன மகிழ்ச்சியோடும், துன்பந் துடைப்பவரடியாரை அமுது செய்வித்தனர்.

20

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1734. (வி-ரை.) நிலை - மூப்பின் தளர்வாலும் மிக்க பசியினாலும் அயர்ந்த நிலை. 1737 பார்க்க.

நாதன் தன் அடியாரை - நாதன் தன் அடியாரை. நண்ணி - மனையகத்துள் நண்ணி, முன்னரே மனையிடத்துள் இருந்தாரேனும், இப்போது நண்ணியது பசி தீர்க்கும் செயலுக்குரிய மனையிடத்துள் என்க.

முன் பாதங்கள் விளக்க நீர் அளித்து - என்க. முன் - இது முதலிற் செய்யப்படவேண்டிய உபசாரம் என்பதாம். பாத்தியம் என்பர். "கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே" (443); "அவர்தாள் முன் விளக்கும் புனைமலர்நீர்தங்கண்மேற் றெளித்துள்ளும் பூரித்தார்" (அப்பூதி - புரா- 20).

பரிகலம் - உண்கலமாகிய வாழைக்குருத்து. அப்பூதியார்புராணம் பார்க்க. அது கிடையாதபோது ஏனையிலைகளும் கொள்வது நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் வந்தது. உலோகங்களாற் சமைந்த கலங்களையும் சுடுமட்கலங்களையும் பரிகலமாகக் கொள்ளுதல் பிற்றைநாள் அநாகரிக வழக்கு.

ஏதம் முதற்கண் உண்பாருடைய பசிப்பிணியும், அதுகாரணமாகப் பின்னர், உண்பிப்பாருடைய பிறவிப்பிணியினையும் குறித்து உரைக்க நின்றது.

நல்விருந்து - விருந்து இங்குப் புதியாதாய் வந்த அடியார்என்ற பொருளில் வந்தது. "இம்மடத்தினிற் காணும் படியிலாதநீர்"(511) என்ற கருத்து. தென்புலத்தார் முதலாகிய ஐவருள் வைத்து, உலகர்கொள்ளும் ஏனை "விருந்து" என்ற பகுதியினின்றும் பிரித்தற் பொருட்டு "நல்விருந்து" என்றார். விருந்தோம்பல் முதலாக வைத்தெண்ணப்படுவன பசுதருமங்களாய் நற்பலன் தந்தபோதிலும் காலாந்தரத்திற் பிறவிக்கேதுவாவன. இங்கு இவ்"விருந்து" அவ்வாறன்றிப் பிறவியை நீக்கி முத்திக்கு வழியாவது என்பது குறிப்பு. "ஏதந்தீர்" என்ற குறிப்புமது. பின்னர்க் கணவனை ஊட்டுவதைக் "கடப்பாட்டி லூட்டுவார்" (1738) என்பது காண்க.

நல்விருந்தா - நல்ல விருந்தாக. ஆக என்றது என ஈறு குறைந்த நின்றது. "பெறலரிய விருந்தானால்" என இக்கருத்தை வரும்பாட்டில் விளக்கியது காண்க. "விருந்து" புதுமை என்ற மட்டில் அமைந்தது; அதுவரை அடியார்களுட் கலந்து வந்ததேயன்றி இவ்வாறு தாமாந் தன்மையிற் பட்டுப் புதிதாய் வந்தாரலர்என்பது குறிப்பு.

18

1735. (வி - ரை.) கறியமுது அங்கு உதவாதே - கறியமுது - திருவமுதுடன் கூட்டுணவாகக் கொள்ளும் கறிவகைகள்; அங்கு - அதுபோழ்து - அதுகாலை என்று காலஞ்சுட்டிற்று; உதவுதல் - உண்பிக்கச் சித்தமாகி இருத்தல். "இன்னடிசிவாக்கி....கறிக்கினியென் செய்கோமென்று" (459); "தூயநற் கறிக ளான வறுவகைச் சுவையா லாக்கி, யாயவின் னமுது மாக்கி" (அப்பூதி - புரா - 23); "பலவுமற்றுங் கறிசமைத்து" (சிறுத் - புரா - 66) முதலியவை காண்க.

திருவமுது கைகூட - திருவமுது - அடிசில். கறியமுது அடைக்காயமுது என ஏனையவை ஒவ்வோர் அடைமொழிகளால் வெவ்வேறுணர்த்தப்படச், சிறப்பும் முதன்மையும் பற்றி அடிசில் (சோறு), சிறப்புணர்த்தும் அடைமொழிகளின்றித் திருஅமுது என்ற பொதுப் பெயராலுணர்த்தப்படும். கைகூடுதல் - சித்தமாயிருந்து