பக்கம் எண் :


882திருத்தொண்டர் புராணம்

 

முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான்.

6

யானே தவமுடையே; னென்னெஞ்சே நன்னெஞ்சம்;
யானே பிறப்பறுப்பா னெண்ணினேன்; - யானேயக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
வம்மானுக் காளாயி னேன்.

7

ஒன்றே நினைந்திருந்தே; னொன்றே துணிந்தொழிந்தேன்;
ஒன்றேயென் னுள்ளத்தி னுள்ளடைத்தேன்; - ஒன்றேகாண்
கங்கையான் றிங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளா மது.

11

அறிவானுந் தானே; யறிவிப்பான் றானே;
யறிவா யறிகின்றான் றானே; - யறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர்பா ராகாசம்
அப்பொருளுந் தானே யவன்.

20

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்ட மொருவு.

40

அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன்;
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்; - என்றுந்தான்
எவ்வுருவோ னும்பெருமா னென்பார்கட் கென்னுரைக்கேன்;
எவ்வுருவோ நின்னுருவ மேது?

61

காலையே போன்றிலங்கு மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின்
றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலு மிடறு.

65

கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய்! மிக்குலக மேழினுக்குங்
கண்ணாளர! வீதென் கருத்து.

72

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார வெண்ணத்தா லெண்ணியும் - விண்ணோன்
எரியாடி யென்றென்று மின்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

85

பெரியனும் பிறிதியாதும் வேண்டே நமக்கீ
துறினு முறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருக ணெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம்.

88

உரையினா லிம்மாலை யந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொற் - பரவுவார்