பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்883

 

ஆராத வன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

101

திருச்சிற்றம்பலம்

திருவந்தாதியின் தொகைக் குறிப்பு :- இறைவரைச் சூழ்ந்து போற்றி நிற்கும் பூத கணங்களின் வடிவம் வேண்டியபடியே கிடைக்கப் பெற்றமைக்கு மகிழ்ந்தும், அந்தப் பேய் வடிவோடு கண்டுகொண்ட இறைவரது அருட்கோலங்களின் காட்சிகளிற் றிளைத்தும், வியந்தும் பாடியது. அந்தாதிக் கருத்தினைப் "பொற்புடைச் செய்யாத புண்டரீ கங்கள் போற்று, நற்கணத் தினிலொன்றானே னானென்று நயந்து பாடி" யதாம் என்று, (திருவந்தாதி - 86) ஆசிரியர் கண்ட காட்டியவாறு காண்க.

திருவந்தாதிப் பாட்டுக் குறிப்பு - பிற்சேர்க்கையிற் காண்க.

____

திருச்சிற்றம்பலம்

திருவிரட்டைமணிமாலை

கட்டளைக் கலித்துறை

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்
தளர்ந்திங் கிருத்த றவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
யிளந்திங் களுமெருக் கும்மிருக் குஞ்சென்னி யீசனுக்கே.

1

வெண்பா

தலையாய வைந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
வண்டத்தா னாதிரையா னாலால முண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

10

கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தமைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினை;நிக ரேதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்விளையே.

11

தொல்லை வினைவந்து சூழாமுன் றாழாமே
யொல்லை வணங்கி யுமையென்னு - மெல்லியலோர்
கூற்னானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீத்றானை நெஞ்சே நினை.

12

உத்தமராய் வாழ்வா ருலந்தக்கா லுற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமு - னுத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்றிறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

20

திருச்சிற்றம்பலம்

இரட்டைமணிமாலைத் தொகைக் குறிப்பு :- "ஆய்ந்த சீர்" என்று, இறைவருடைய சீர்களைப் பாடும் பொருளைக் கொண்டது இம்மாலை என்று ஆசிரியர் அறிவித்தது காண்க. 1769ல் உரைத்தவை பார்க்க. மலங்களைக் களைந்து உயிர்களைக் காக்கும் கருணையாளன் சிவபெருமான்; அவனை அடைந்து உய்தல் கடன் என்று தமது நெஞ்சுக்கு உபதேசிக்கும் முறையால் உலகுக்கு அறிவுறுத்தியது இம்மாலை