பக்கம் எண் :


886திருத்தொண்டர் புராணம்

 

கடிது வந்து" (820) என்ற திருக்கண்ணப்ப நாயனார் செயல் ஈண்டுச் சிந்திக் கற்பாலது. ஆண்டுரைத்தவை பார்க்க. இன் - உவமவுருபு; உம்மை சிறப்பும்மை. கடிது - விரைவு. இல் - உருபு தொக்கது. கடிதில் என்பதும் பாடம்.

தொடை அவிழ் இதழி மாலை - தொடை அவிழ் - தொடைபோல அலர்கின்ற என்க. இன் என்ற உவமவுருபு தொக்கது. "செய்தவிரைத் தாமமென மன்றன் மலர்த் துணர்தூக்கி" (946) என்றது காண்க. இதழ்களின் சுருள் அவிழ்ந்த என்பாரும், கொத்தாக விரிந்த என்பாருமுண்டு. அவை ஏனைய மலர்களுக்கும் ஒத்தலின் சிறப்பின்றென்க.

இதழிமாலைச் சூல பரணியனார் - கொன்றையும் சூலமும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரியவை.

படர்ஒளி - நெடுந்தூரம் சென்று பரவி வீசும் ஒளி. இங்கு ஞான ஒளியும் கொள்ளப்படும்.

ஆங்குக் காலின் நடையினைத் தவிர்த்து - ஆங்கு - கயிலையின் பாங்கு அணைந்தவுடன் மலையின்மேல் ஏறத் தொடங்கிய இடத்து. காலின் நடை - காலினால் நடந்து செல்லுதல். ஆங்குத் தவிர்த்து என்றதனால் அதுவரை பாண்டிநாட்டோர் பட்டினத்திலிருந்து கயிலை அடிவாரம் வரை உள்ள நாடும் வழிகளும் எல்லாம் காலினால் நடந்து சென்றனர் என்பது பெறப்படும். ஆயின் இவ்வாறு நினைந்த விரைவின்படியே காலினால் எவ்வாறு சென்று, சோர்வும் ஊறும் இன்றிக் கடிது சேர்ந்தனர்? எனின், அம்மையார் கொண்ட பேயாய உருவம் அதற்கேற்ற தென்பதாம். பேய்வடிவம் ஏனை உடல்கள்போல மண்ணின் (பிருதுவி) பகுதி விஞ்சாமல் காற்றுப்பகுதி (வாயு) விஞ்சியுள்ளது. ஆதலின் ஊறுபாடு பெறுதற்று இயைபின்மையோடு , வாயு வேகம் மனோவேகம் என்றபடி, மிக்க விரைவாகவும் செல்லும் தன்மையுடையது. காலின் நடை தவிர்தல் - புண்ணிய தலமாதலின் காலால் மிதித்தல் தகாதென்று கருதித் தலையினால் நடந்தனர். கயிலை சிவபெருமான் எழுந்தருளியுள்ள மலையாதலின் அதன் அடிவாரமானது சிவனது அடியே எனக் கருதப்படும். அவனது திருவடியில் தமது தலை பொருந்த நடத்தலே தகுதி என்று, "தாடலை" என்ற சாத்திரக் கருத்துக்கிசைய, அம்மையார் தலையினால் நடந்தனர் என்றலுமாம். புண்ணிய தலத்திற் காலால் மிதிக்கலாகாது என்பது விதி. திருவாலங்காட்டிலும் இவ்வாறே அம்மையார் நடவாதது காண்க. திருநாவுக்கரசர் கைத்தொண்டுசெய்த புண்ணிய தலமாகிய திருவதிகையை மிதிக்க அஞ்சி, ஆளுடைய நம்பிகள், புறத்தே சித்தவட மடத்துத் தங்கிய வரலாறும், அம்மையார் தலையால் நடந்த பதியாகிய திருவாலங்காட்டினுள்ளே மிதித்தடைய அஞ்சி ஆளுடையபிள்ளையார் புறத்துத் தங்கிய வரலாறும், அங்கும் அவ்வரிய செயல்களை உலகுக்கறிவுறுத்த இறைவர் கனவில் அவ்விருவர்க்கும் அருளிய அருளிப்பாடுகளும் இங்கு நினைவு கூர்தற்பாலன. 229-ல் உரைத்தவை பார்க்க.

தலையினால் நடந்து செல்லுதல் - இருகைகளையும் தரையில் ஊன்றித் தலை கீழாய் நடத்தல்.

இதழிமாலை - சூலபாணி - இங்கு இவ்விரு தன்மையாலும் இறைவரைச் சுட்டியது என்னை? எனின் கொன்றை - பிரணவ உருவமைந்து இறைவன் அதனுடைய அமர்ந்திருப்பதை "நறுங்கொன்றைப் போதினுள்ளான்" (தேவா) என்றபடி விளக்கி நின்றது, சூலம் - "மும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறியப்ப" (சிறுத். புரா - 35) என்றபடி மும்மலமும் போக்கி முழுஞானந் தரும் முதல்வர்