ஞாலம் காதலித்துப் போற்றும் தடம் - ஞலம் - அறிவோர். "இசைக்குமன்னுலகே" (போதம் 6) என்புழிப்போல. நாளில் - காதல் - ஓங்க - எய்திப் - பாடினார் - (1780) என்று வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. என்றெடுத்தே - மூலங்காணாதார் - என்பனவும் பாடங்கள். 63 1780. (வி-ரை.) மட்டவிழ் கொன்றையினார்தம் - திருக்கூத்து - என்றது கொன்றை, திருவடையாள மாலையாமா றுணர்த்தியதுடன் பிரணவ வடிவினதாதலும், ஐயன் திருக்கூத்து அவ்வடிவே யாதலும் குறிப்பாலுணர்த்தியவாறு. முன் வணங்கும் - முன் - நேர்பட்டு. நேரே ஏனைக்கணத்தவர்க்கு முன் என்றலுமாம். முன் என்றதனை முன்காலத்திலெல்லாம் என்ற பொருள்படக் கொண்டு, முன்னெல்லாம் இக்கூத்தினை வணங்கும் இட்டம் மிகக்கொண்ட காதல் இப்போது மேலும் எழுந்தோங்க என்றுரைத்தலுமாம். "மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" (அற் - அந். 1) என்றது காண்க. வியப்பெய்தி - வியப்பாவது பெருங்காதல் எழுந்தோங்கிய தற்கேற்ப ஆடலை முன் வணங்கத் தாம் பெற்ற பெரும் பேற்றினைக் கருதி எழுந்த மனநிலை. இது தம்மை யுள்ளிட்ட பேய்க்கணம் முழவம் கொட்டவும் பாடவும் அதற்கிசையக் குழகன் ஆடும் என்றதனால் அறியப்படும். வியப்பெய்தி என எடுத்து ஆடும் என்ற பாடினார் என்றது இக்கருத்தை விளக்கியது. "எட்டி யிலவம் ஈகை" - இது திருப்பதிகத்தின் தொடக்கம். எட்டியும் இலவும் ஈகையும் பாலைக் கருப்பொருள்கள். ஈகை - இண்டு. ஆடும் - பேய் முழவங்கொட்டக் குழகன் அதற்கிசைய ஆடும். குழகன் - குழகு - பேரழகு. அன்பிற்குக் குழைபவன் என்றலுமாம். எழுந்தோங்க வியப்பெய்த - என்பதும் பாடம். 64 திருச்சிற்றம்பலம் | அம்மை மூத்த திருப்பதிகம் பண் - நட்டபாடை |
| கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டிற் றாழ்சடை யெட்டுத் திசையும் வீசி யங்கங் குளிர்ந்தன லாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங்காடே. 1 ஒப்பினையில்லவன் பேய்கள் கூடி யொன்றினையொன்றடித் தொக்கலித்துப் பப்பினை யிட்டுப் பகண்டை பாடப் பாடிருந் தந்நரி யாழ மைப்ப வப்பனையணிதிரு வாலங் காட்டு வடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்ப மெய்து வாரே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருக்கயிலையிற் பெற்ற அருளாணையின்படி திருக்கூத்துக் கண்டுகொண்டு திருவடிக்கீழ்ப் பாடிக்கொண்டு இருக்கும்பொருட்டு அம்மையார் திருவாலங்காட்டினைத் தலையால் நடந்து சேர்ந்தனர்; ஆலமரங்கள் நிறைந்த பெருங்காடாயிருந்த அத்தலத்தைக் கும்பிட்டனர்; அதனுள் பேய்கள் பலவாறும் பாடியும் ஆடியும் முழக்கியும் களித்து இருக்கக் கண்டனர்; அவை காண இறைவர் மேலண்டமுறத் திருவடியை நிமிர்த்து ஆடும் திருக்கூத்தையும் காட்டக் கண்டனர்; இவ்வாறு கண்ட இடமாவது திருவாலங்காடேயாம் என்று தலத்தைப் பற்றிப் போற்றியது பதிகக்கருத்து. "கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோர் |