திட் டைமே லுந்தி, யலமந்த போது" (தேவா) என்ற கருத்துக்கொண்டு உரைப்பினுமாம். புறங்காடு - ஈமத்தின் புறத்தின் உள்ள தனியிடம். சிறு விறகின்மேல் இடுதலின்முன் இங்கு இறந்தவரை வைத்துக் கடைமுறையாகச் சடங்கு செய்யும் வழக்குப்பற்றிப் புறங்காட்டிலிட்டுச் சத்தியில் வைத்துக் கடமைசெய்து என்றார். கடமை - உடலைப்பற்றிக் கடைசியாகச் செய்யும் ஈமச்சடங்கு. தக்கவர் ஈமச்சடங்கு செய்யும் உரிமையுடையார். கதுவ - நிறைய. ஆர்க்க - ஆர்க்க -அடுக்குப் பன்முறையும் நடத்திச் சத்திக்கும் இயல்பு குறித்தது. அந்தி - சங்காரம் - (11) ஒக்கலித்தல் - களிப்பு மிகுதியால் ஆரவாரித்தல். பப்பினையிடுதல் இசைவகை. நரி யாழமைப்ப - நரி கூவுதல் பகண்டை பாடுதலுக்கேற்ப யாழ் வாசித்தல்போல ஒலிக்க. செடிதலைமுடிக்கப்படாது செடிபோல விரித்த மயிருடைய தலை. காரைக்காற் பேய் - அம்மையார். சிவகதி சேர்ந்தின்ப மெய்துவர் - பதிகப் பயன் கூறியபடி. அற்புதத் திருவந்தாதியினும் இறுதிப்பாட்டில் இவ்வாறே தமது பெயரைப் பொறித்தும் பயன்கூறி யருளியும் முடித்தது காண்க. இம்மரபு அம்மையார் காட்டியருளியபடி பின்னர்த் திருப்பதிகங்களின் வழங்கலாயிற்றுப் போலும். இப்பதிகத்தாற் போந்த தொகைப் பொருளாவது :- கயிலையினின்றும் அம்மையார் தாம் பெற்ற பேய் வடிவுடன் ஆணையின் வழியே திருவாலங்காட்டினை வந்தணைகின்றார்; அங்கு அந்தக் காட்டினையும் அங்கு ஐயன் பேய்க்கணஞ்சூழ்ந்து இசையும் இயமும் முழக்க இலயம்பட ஆடும் கூத்தினையும் காண்கின்றார்; அந்த இடத்தைப் பற்றி ஐயன் காட்டத் தாம் கண்ட நிலையை உள்ளவாறே உலகறியப் பாடியருளுகின்றார்; ஐயன் சங்கார காரணனாகிய முதல்வன்; "நற்கணத்தி லொன்றாய" பேய் வடிவுடையராதலின் பேய்க்கணஞ் சூழ ஆடும் நிலையினையே காண்கின்றார்; ஆடும் இடம் சுடலைக் காடு; அங்கு வாகை - கள்ளி - ஈகை முதலியவை செறிந்தன; அங்கு வாழும் பேய்களுள்ளே தாயும் சேயும் உண்டு; நரிகளும் அங்கு வாழும்; கூகை - ஆந்தை முதலியன பாடும்; இறந்தவரை இட்டுச் சடங்கு செய்து மூட்டிய செந்தீயே அங்கு விளக்காக உதவும்; பேய்க்கணம் பலவாறு கூடியும் ஓடியும் ஆடியும் பாடியும் களிக்கும்; ஏழிசையும் பாடும்; இயங்கள் பலவற்றையும் முழக்கும்; இவ்வாறு வெப்ப மிக்க சுடலையில் நடுநாளையில் அங்கங்குளிர்ந்து அருளுடன் எங்கள் அப்பன் ஆடும்; அவ்விடம் திருவாலங்காடேயாம். மேல்வரும் பதிகத்தும் இவ்வாறே கண்டுகொள்க. இப்பதிகம் தலம் பற்றியதும் மேல்வருவது நடம் பற்றியதும் ஆம். II திருச்சிற்றம்பலம் | பண் - இந்தளம் |
| எட்டி யிலவ மீகை சூரை காரை படர்ந்தெங்குஞ் சுட்ட சுடலை சூழ்ந்தி கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழக னாடுமே. 1 சூடு மதியஞ் சடைமே லுடையார் சுழல்வார் திருநட்ட மாடு மரவ மரையி லார்த்த வடிக ளருளாலே காடு மலிந்த கனல்வா யெயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவ நாசமே. |
11 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- முன் பதிகத்துக் கூறப்பட்ட குறிப்புக்கள் காண்க. ஐயனது "திருக்கூத்துமுன் வணங்கும் பெருங் காதல் எழுந்தோங்க வியப்பெய்திப் பாடினார்" என்று ஆசிரியர் காட்டியருளியதும் காண்க. |