பக்கம் எண் :


914திருத்தொண்டர் புராணம்

 

1வானத்தா னென்பாரு மென்க; மற் றும்பர்கோன்
றானத்தா னென்பாருந் தாமென்க; - ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தரனென்பன் யான்.

6

ஞானமே உருவாயினவரும் திருநீலகண்டருமாகிய சிவபெருமானை, வான் முதலாக வைத்தெண்ணப்பட்ட இவ்வுலகத்தவர் என்று கூறுவார் கூறுக; தேவேந்திரனுடைய விண்ணுலகத்தவர் என்று கூறுவாருங் கூறுக; நான் அவர் என் நெஞ்சையே இடமாகக் கொண்டு நீங்காது வீற்றிருப்பவர் என்று கூறுவேன்.

இவ்வாறன்றி, வான் என்றதனை விண்ணுலகமென்றும், தானம் என்றதனை அதனின் வேறாகிய மண்ணுலகமென்றும், கொண்டு, உம்பர்கோன் - தேவதேவனாகிய - கண்டத்தான் என்று கூட்டியுரை கொள்வாருமுண்டு. ஞானத்தால் - திருவருள் ஞானத்தால் என் நெஞ்சத்தான் என்றுரைப்பர். எனது நெஞ்சினிலை பெற்று நீங்காமலிருப்பன் சிவன் என்றிறுமாந்து கூறும் அநுபவ நிலை. "இறு மாந்திருப்பன் கொலோ வீசன், பல்கணத் தெண்ணப்பட்டு" (திருவங்கமாலை); "நாடி நாரண னான்முக னென்றிவர், தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ.......தில்லை அம்பலத், தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே!" (குறுந்); "திருமாலொடு நான்முகனுகந் தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்" (திருவங்கமாலை); "அத்தனெனக் கருளியவர றார்பெறுவார்?" (திருவா) முதலிய கருத்துக்கள் கருதுக. மேல்வரும் திருப்பாட்டும் இக்கருத்து.

6

1யானே தவமுடையே; னென்னெஞ்சே நன்னெஞ்சம்;
யானே பிறப்பறுப்பா னெண்ணினேன்; - யானேயக்
கைமா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
வம்மானுக் காளாயி னேன்.

7

பிறப்பறுப்பான் எண்ணிச் சிவபெருமானுக்கு ஆளாயினேன்; (ஆதலின்) யானே தவமுடையேன்; என் நெஞ்சமே நன்னெஞ்சம்.

முன்பாட்டின் கருத்தினைத் தொடர்ந்து கூறியது. பிறப்பறுப்பான் எண்ணினேனாய் ஆளாயினேன் என்று கூட்டுக. அறுப்பான் - அறுக்கும் பொருட்டு. அக்கைமா - அகரம் உலகறிசுட்டு. கைமா - யானை. ஏகாரங்கள் தேற்றம். இவ்வாறு எண்ணி ஆளாகார் தவமுடையரல்லர்; அவர்களது நெஞ்சு வேறு எதனை நினையினும் நன்னெஞ்சன்று என்பதும் பெறப்படும். ஆளாதலே பிறப்பறுக்கும் வழி என்பதாம்.

7

ஆயினே னாள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினே னஃதன்றே யாமாறு - தூய
புனற்கங்கை யேற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை யேற்றா னருள்.

8

ஆள்வானுக்கு ஆள் ஆயினேன்; அன்றே சிவமாந்தன்மை பெற்றேன் ஆயினேன்; சிவனுக்கு ஆளாயினபோதே பெரும்பேறு பெற்றவளாயினேன்; அதுவன்றோ அவனருள்!

பெறற்கரியன் ஆயினேன் - சிவத்தன்மை பெற்றேன். பெறற்கரியன் - சிவன் "சிவமானவாபாடி"; "சிவமாக்கி" (திருவா). அன்றே - ஏகாரம் முன்னையது தேற்றம்; பின்னையது வினா, அனற்கு - அனலை; குவ்விகுதி இரண்டனுருபின்