பக்கம் எண் :


924திருத்தொண்டர் புராணம்

 

"அந்த மாதி" என்றும் "ஈறே முதல்" என்றும் கூறுமாற்றால், சங்கார காரணனாதலில் முதன்மையிடம் பெற்றவன். "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே" (தேவா). முதன்மை - உலகிற்கு நிமித்த காரணனாதல். சங்காரத்தையும், புரம் எரித்தலையும், நுதற்கண்ணையும் சுடுந் தன்மைபற்றியே கூறியது பிறையின் கதிர்போந்து ஒழுகியதற்குத் தற்குறிப்பேற்றம்பற்றிக் காரணம் கற்பித்தவாறுமாம். முத்தொழில் எனவும், முப்புர மெனவும். முக்கண் எனவும் மும்மூன்றாய்க் கூறியது மார்பின் நூலும் மும்மூன்றாய்ப் பிரித்த மூன்று நூல்களாய் ஒன்பது இழைகளையுடைமைக் குறிப்புப் பட நின்றது. "ஒன்பதுபோலவர் மார்பினினூலிழை."

32

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!
நீல மணிமிடற்றா னீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கு
மக்கோலத் தவ்வுருவே யாம்.

33

தாம் தாம் கற்ற நூலான் அறிந்த அளவில் அமைந்து தாங்கண்டதே காட்சியென்று பேசி அன்பின் றிறத்தின் நுழையும் திறமில்லாதவர் அவ்வாறு தத்தமக்குக் கேற்றபடி திரிந்திடுக!. திருநீலகண்டராகிய சிவனது தன்மையே எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தி மேல் நின்றது; எவ்வாறெனின், எந்தக்கோலத்தில் எவ்வுருவத்தால் எத்தவங்கள் செய்பவர்க்கும் அவ்வவர் தன்மையேயாகி நிற்கும்.

நூலறிவு - பசு ஞானத்தா லறியப்பட்ட அளவுட்படும் அறிவு. நுழைவு- பதி நிறைவினுள் நிற்கும் அனுபவ நுழைவு. சாத்திரத்தை யோதினர்க்குங் சற்குருவின் றன்வசன, மாத்திரத்தே வாய்த்த நலம் வாய்க்குமோ" (களிறு . 6.) மேலுகத்தல் - தானே மேலாய் நிற்றல்; அவ்வுரு வேயாம் - "ஆரொருவ ருள்குவா ருள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற வருள்" (தேவா); "யாதொரு தெய்வங் கொண்டீரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்" (சித்தி.) "ஓவாதே, யெவ்வுருவில் யாதொருவ ருள்ளத்தது, ளவ்வுருவாய்த் தோன்றி யருள் கொடுப்பா - னெவ்வுருவுந், தானேயாய் நின்றளிப்பான் றன்னிற் பிறிதுருவ, மேனோர்க்குங் காண்பரிய வெம்பெருமான்" (ஞானவுலா.) தவங்கன் நினைக்கும் முறைகள். அமைந்து பயன்பெறாது அலைவராதலின் திரிக என்றார். "அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர் பொருளாய்" (சித்தி); "ஆறொன் றியசம யங்களினவ்வவர்க் கப்பொருள்கள், வேறொன்றிலாதன" (தேவா - திருவிருத்தம்) என்ற கருத்தை ஈண்டு வைத்துக் காண்க.

33

ஆமா றறியாமே வல்வினைக ளந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமந
றொருகருணையாற் செற்றானை யுள்ளத்தா லுள்கி
யருகணையா தாரை யடும்.

34

சிவபெருமானை நினைந்து அணையாதாரை வல்வினைகள் அடரும்; அசை ஆமாறு அறியாவேனும் அது செய்வது இறைவனாணையாலாம்.

அணையாரை வினைகள் - அடும்; அறியாவேனும் ஆணையாற் செய்யவல்லன. அறியாமேயும் என்று இழிவு சிறப்பும்மை தொக்கது. "ஆணையின், இருவினையின்" (போதம் - 2); ஏத்தார் நகர் செற்றானுடைய ஆணையால், அணையாதான வினைகள் அடும் என்று அவனது ஆணையினாலே வினைகள் வந்திடும் என்றபடி ஆம் - ஆறு வினை விளையும் கதி நிமித்தம்பற்றி யுளதாம் நெறி. ஆடுதல் - இங்குத் தீவினைப் பயனாகிய துன்ப நுகர்விக்கும் செயல் குறித்தது. "சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே" (தேவா).

அறியாவே - என்பதும் பாடம்.

34