பக்கம் எண் :


926திருத்தொண்டர் புராணம்

 

மறை, போலும் என்றபடி. கார் - ஏனக்கொம்பு - கரியவிட்டுணு வராக அவதாரத்தில் அர்ப்பணம் செய்த கொம்பு. "ஐயிரு பிறப்பினு மரியருச் சித்தலின்" (சுலோக பஞ்சகம்). தாரேறு - மாலை போலும். ஏறு - உவம உருபு. "ஏன முளைக்கொம்பவை பூண்டு" (தேவா.)

38

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
அம்பவள மேனி யதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தான் வெள்ளி
மணிவரையே போலு மறித்து.

39

உமை அம்மையாரை ஒரு பாகத்திற் கொண்ட ஐயனது பவளம் போன்ற திருமேனி முன்னர்ப் பொன்மலை போலவும், திருநீறு பூசினால் மீண்டும் வெள்ளி மலை போலவும் இருக்கும்.

கொம்பு - பூங்கொம்பர் போன்ற உமையம்மையார். உவம ஆகுபெயர். செம்பொன் அணிவரை - அணிமிகுதியு மணிந்த அம்மை பாகம் பொன்மலை போலும் என்பதும் குறிப்பு. திருமேனி ஒன்றே பவளமலையும் பொன்மலையும் வெள்ளிமலையும் போல உள்ளது என வியந்து கூறியது.

39

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்ட மொருவு.

40

மடநெஞ்சே! தொண்டர் பாதம் மறித்துக் குறித்து வாயாலும் சொல்லித் தொழு; சிவனை நினையாதவர் கூட்டத்தை நீங்கு.

மடநெஞ்சமே! உனது அறியாமை நீங்க உபாயம் சொல்கின்றேன் என்பது; உபாயமாவது தொண்டர் பாதம் தொழுவதும் அல்லாதார் கூட்டம் ஒருவுதலுமாம். ருவுதல் - நீங்குதல்; தொண்டர் பாதம் தொழுதலே யமையும்; ஒருவுதல் எற்றுக்கு எனின், "அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்து வாராதலான்" என்பது சிவஞானபோதம். "மறப்பித்துத், தம்மை மலங்களில் வீழ்க்கும், சிறப்பில்லாத தந்திரத்துச் சேர்வை - யறப்பித்துப், பத்த ரினத்தாய்ப் பாணுணர்வீ னாலுணரும், மெய்த்தவரை மேவா வினை" (12 சூத். உ. வெ 75); "தொண்டர் வரிற்றெழுது" (1721); "நம்பரடி யாரணைந்தானல்ல திருவமுதளித்தும்....... வேண்டுவ கொடுத்தும்" (1731) என்றுவரும் புராண வரலாற்றுக்கு அகச்சான்று. மறித்தும் - மீண்டும் மீண்டும் எப்போதும்; குறித்து குறிவைத்து குறிக்கோளாய் கொண்டு; தொழு - கைகூம்பச் செய்து முக்கரணங்களாலும் தொழுதல் கூறப்பட்டது. "குறித்து" என்பதை "குறித்துத் தொழு", "குறித்து ஒருவு என இருபாலும் சேர்க்க.

40

ஒருபா லுலகளந்த மாலவனா மற்றை
யொருபா லுமையவளா மென்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டேமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

41

ஒரு பாகத்தில் திருமாலும் மற்றை ஒரு பாகத்தில் உமையம்மையாரும் இருப்பர்; ஆதலின் இருபாலும் உனது தனி உருவம் இன்னவாறு என்று நிறத்தால் தெரியமாட்டோம்; ஆதலால் திருமால் உமது உருவமா? உமை உமது உருவமா? என்று வினவியபடி.

"பிரிவிலா வமரர்கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும், அரியாலாற் றேவியில்லை பையனை யாறனார்க்கே" (நேரிசை) என்றபடி திருமால் இறைவனின்