இணைந்த உமை யம்மையாரது குழற்சடையினை வரும்பாட்டிற் கூறும் இயைபு காண்க. 49 சடைமேலக் கொன்றை தருகனிகள் போன்று புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பாலக் கோலமதி வைத்தான்றன் பங்கிற் குலப்பாவை நீலக் குழல். 50 இறைவரது வலப்பாகத்தில் சடைகளிற் சூடிய கொன்றை மலர்கள் தந்த கனிகள் தொங்குவன போன்றுள்ளன அவரது இடப்பாகத்தில் அமரும் அம்மையாரது கரிய நீண்ட கூந்தலின் சடை. பூவும் கனியும் ஒருங்கே காணவுள்ளது கொன்றையின் இயல்பு; அதன் கனிகள் கரியனவாய் நீண்டு தொங்குபவை உமை அம்மையாரின் குழற்சடை போன்றன என்பது, கொன்றை, ஐயன் சடைமேற் சூடும் சிறப்பாயுரிய திருவடையாள மாலை. குழற்சடை கொன்றைக் கனிபோன் றமைதலுக்குரிய கூறு மைக்குப் பொருத்தம் கற்பித்தவாறு. முன் பாட்டில் ஐயனது சடைச்சிறப்புக் கூறிய அம்மையார் இப்பாட்டில் அயலே உள்ள உமை அம்மை குழற்சடையினை அணிந்து போற்றுகின்ற இயைபும் காண்க. அக்கோல மதி முன்பாட்டிற் சடையினை அணிசெய்வதாய்க் கூறிய அந்த மதி என அகரம் முன்னறிசுட்டு. 50 குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவி லீமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடு மங்கு. 51 நள்ளிரவில் ஈமப்பெருங்காட்டில் தீயினடுவில் பேயோடும் நீ ஆடும் அங்கும் இறைவரே உம்முடைய பாகத்தில் உமையம்மையாரை வைத்துக்கொண்டு செல்லவேண்டா. பேரிரவு - நள்ளிரவு: ஈமப்பெருங்காடு - உலகம் சங்கரிக்கப்பட்ட இடம் சங்காரத்தின் பின்னும் புனருற்பவத்தின் முன்னும் உள்ள காலமும் இடமும் இவ்வாறு குறிக்கப்படுதல் மரபு. ஆர் அழல் - உலகை அடும் தீப்பெருக்கு. காலமும் இடமும், தீச்சூழலும், பேய்ச்சுற்றமும் பெண்ணினல்லாள் உடனிருத்தற்கு ஏற்றதன்று என்பதாம். அங்கு - மேற்குறித்த அவை எல்லாவற்றினிடை எனப் பொருள் தந்தது. ஆடும் - என்பது புனருற்பவங் கருதிய அருட்கூத்து. சங்காரக் கிரமத்தில் சிவத்தில் ஒடுங்கிய சத்தி, சிருட்டிக் கிரமத்தில் வெளிப்படுங்காலம் இத்திருக்கூத்தின் பின் உளதாதலின், ஒடுங்கிய சத்தியுடன் தனிநின் றாடுதலாயிற்று அதனைப் பாகத்தெழிலாக வைத்து ஏகவேண்டா என்றுபசரித்துக் கூறினார் அம்மையாரது தாய்போன்ற அன்பின்றிறமும் காண்க. சிறுபுரம் - பிடரி. 51 அ ங்கண் முழுமதியஞ் செக்க ரகல்வானத் தெங்கு மினிதெழுந்தா லொவ்வாதே - செங்கட் டிருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர். 52 ஐயனது செஞ்சடைக் கற்றையின்மேல் வைத்த சிரமாலை தோன்றும்அழகின். சிறப்பானது அகன்ற செவ்வானத்தில் அழகிய முழுமதியம் எங்கும் எழுந்தார் போலும். |