செக்கர் அகல்வானம் - சிவந்து நீண்டு விரிந்த சடைக்கற்றைக்கும் சிரமாலை - முழுமதியங்கள் பலவற்றின் கோவைக்கும் உவமை. "செஞ்சடைக் கற்றை முற்றத்திள்நிலா வெறிக்குஞ் சென்னி" (கோயில் - நேரிசை); சிரமாலையின் ஒவ்வொரு சிரமும் ஒவ்வோர் முழுமதிபோன்று விளங்கும் என்பது. ஒவ்வாதே - செக்கரில் முழுமதியம் பல கோத்து எழுந்தாலும் இதன் சீருக்கு ஒப்பாகாது; ஏகாரம் தேற்றம் எழுந்தாலும் - இழிவு சிறப்பும்மை தொக்கது. செங்கண் திருமாலைப் பங்குடையான் - 41ஆவது பாட்டுப் பார்க்க. சீர் - அழகு. சீருக்கு - என நான்கனுருபு தொக்கது. இனிது எழுதல் - கதிர்ப்பரப்பி விளங்குதல். 52 சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடி தான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53 கொன்றை மலர்கள் தழைத்தலாலும், பேராறு பெருக்கெடுத்தலாலும் இறைவரது திருமுடி கார்காலத்தை ஒக்கும். கொன்றை மலரும் பருவமும். நதிகள் பெருகுங் காலமுமாதலின் கார்காலம் உவமையாயிற்று. மலர் தழைத்தல் பூத்தல்; பேரியாறு - கங்கை; ஒக்கும் என்ற பயனிலை தொக்குகின்றது. முடி ஓர் கார் எனப் பெயர்ப் பயனிலைகொண்டு முடிந்தெனினுமாம். பாம்பு நாண்கொண்டு என்க. அசைத்தல் - விரிந்த சடையைக் கட்டுதல். 53 காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே! யெங்கொளித்தாய்? ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியா னின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு. 54 கண்ணுதலே! உம்மோடு ஓருருவாய் ஒரு பாகத்தில் உள்ள திருமால் காணா வகை பண்டொரு காலத்து எங்கு ஒளித்தாய்? கார் உருவத்து - விடம், இறத்தல் செய்யும் தனது தீங்கு நீக்கிக், காத்தல் செய்யும் காரினது உருவத்தில் அமர்ந்த; காணாமே - எங்கு ஒளித்தாய் - என்று கூட்டுக. பண்டு - அடிதேடி அறியமுடியாத அந்நாளில். நின்னோடு உழிதருவான் - பாகத்தானாயும் காணாமே என்க. ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - ஓருரு - என்றது தாருகவனத்தில் பிச்சைக்கு நீ உழிதரும்போது அதற்கொத்தபடி கொண்ட மோகினி உருவத்தை. இதற்கு ஓருடம்பு என்றுரைத்தனர் முன்னுரைகாரர்; அது பாகத்தான் என்றதனாற் பெறப்படுகினற்மையிற் கூறியது கூறலாய் வழுவாம் என்க. நீருரு மேனியான் - காரினது நீல நிறமுடையவன்; விட்டுணு; நீர் வெண்ணிறமாதலின் பண்டை வெண்ணிறமுடைய விட்டுணு என்றலுமாம். அப்பு தத்துவ நிலையராதலும் குறிப்பு. பாதத்தான் - என்பதும் பாடம். 54 பண்டமா ரஞ்சப் படுகடலி னஞ்சுண்டு கண்டங்க றுத்ததுவு மன்றியே - யுண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பான்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55 பணி உறுவார் - பாம்புகளை அணிந்த இறைவர்; பண்டு - முன் ஒரு காலத்தில்; அமரர் அஞ்சக் கடலிற் படும் நஞ்சுண்டு - தேவர்கள் அஞ்சும்படி கடலில் எழுந்த |