பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி933

 

னுழைத், துன்னிய யாவையுந் தூய்மை செய்வது" (375) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. (திருநீல - புரா. 16); மிக்கு மேலாட அஞ்சி - வந்து பலியிடார் என்க. பலி யிட்டார் - என்பதும் பாடம்.

57

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தா லொவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையு மாங்கவன்றன் பொன்னுருவிற்
பாகத்தான் பூங்குழலும் பண்பு.

58

இறைவரது செஞ்சடையும் உமையம்மையாரது கரிய குழலும் உடனிருத்தலுக்கு எரியும் இருளும் ஒன்று போலவே உடனிருந்தாலும் ஒப்பாகாது.

மிக்க முழங்கு - என்றும், வீங்கிய பொங்கு - என்றும் வரும் அடைமொழிகள் மிகுதியும் செறிவும் திணிந்த தன்மையும் குறித்தன. இல்பொரு ளுவமை. உரு - திருமேனி; மார்பு என்றலுமாம். 26-ம் பிறவும் பார்க்க. ஒவ்வாதே - ஏகாரம் தேற்றம். பூங்குழல் - அழகிய கரிய குழற்சடை - கூந்தல்; கரிய என்பது உவமைக்கேற்ப அவாய்நிலையான் வந்தது. செம்மயிர் - உயர்சாதிப் பெண்க ளிலக்கண மன்று என்பது நமது நாட்டு மரபு.

58

பண்புணர மாட்டேனா; னீயே பணித்துக்காண்
கண்புணரு நெற்றிக் கறைக்கண்டா! - பெண்புணரும்
அவ்வுருவோ? மாலுருவோ வானேற்றாய்! நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவ மேல்.

59

நுதலிற் கண்ணும், கழுத்திற் கறையும்கொண்டு விளங்கும் இறைவரே! நீறு அணிவது நின்னுருவமாயின், அக்கூறு உமையம்மையாருடன் கூடிய உருவா? அன்றித் திருமாலுடன் கூடியவுருவமா? இதன் பண்பினை யான் உணருமாற்றால் இல்லேன்; நீயே பணித்தருள்வாயாக.

உணரமாட்டேன் - உணர வலியில்லேன்; பணித்துக் காண் - காண் - உடன்பாட்டு வியங்கோள் விகுதி. இனி, காட்டிக் காண்பாயாக. "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்" (போதம் - 11. சூ.) என்றபடி நான் உணரும்படி நீ உணர்வாயாக என்றலுமாம் கண் புணரும் நெற்றி-நெற்றிக்கண் வேண்டும் போது திறப்பதாதலின் புணரும் என்றார். பெண் புணரும் அவ்வுரு என்றது சங்காரத்தின்பின், சத்தியுடன் கூடிய நிலையைக் குறித்தலின், புணரும் - சேரும் என்றார். தோற்றும் முறையில், முன்னர்க் கூடுவது சத்தியும், பின்னர்க் கூடுவது மாலும் ஆதலின் அம்முறையில் வைத்தார். நீறு அணிவது - நின்னுருவமேல் என்று கூட்டுக. நின் உருவமே நீறணிவது என்று மறைகள் முழங்கும். அற்றாயின் என்க. ஏல் - அயின் என்ற பொருள்படவரும் வினையெச்ச விகுதி. மேல் என்று கொண்டு ஏழனுருபாக வைத்து உருவத்தினிடத்து என்று கூட்டி உரைப்பாருமுண்டு.

59

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலா மொளிபுதைத்தா லொவ்வாதே - மாலாய
கைம்மா மதகளிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் றிருமேனி யன்று.

60

பெருமேகங்கள் ஏழும் சேர்ந்து ஒரு பொன்மலையினது ஒளியைத் தமக்குள் அடங்கப் புதைத்தாலும் அக்காட்சி இறைவன் அன்று யானைத்தோலைத் திருமேனி மேற் போர்த்தபோது கொண்ட காட்சிக்கு ஒப்பாகாது.