பக்கம் எண் :


940திருத்தொண்டர் புராணம்

 

விசும்பில் வீதியுடைய - விண்ணுலகத்தில் வாழ்தற் கேதுவான ஊழினையுடைய; பாவம் - இரக்கக் குறிப்பு; தாமரைபோல் பொல்லா ஆம் என்க. தாமரை போலச் சிவந்தன. பொல்லா என்றதனால் இயல்புக்குமேன் மிகச் சிவந்தன என்பது. "நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்ந்துகுத்த, பைம்போ துழக்கிப் பவளத் தழைப்பன...." (திருவிருத்) என்ற கருத்துக் காண்க. விண்ணோர் வீழ்ந்து பணியுந் தன்மைபற்றித் திருவடியைப் போற்றியது.

76

அடிபேரிற் பாதாளம் பேரு; மடிகண்
முடிபேரின் மாமுகடு பேருங்; - கடக
மறிந்தாடு கைபேரில் வான்றிசைகள் பேரு;
மறிந்தாடு மாற்றா தரங்கு.

77

இறைவரே! உமது திரு அடி பெயர்ந்தால் பாதலமேழும் பெயரும்; திருமுடி பெயர்ந்தால் பெரிய அண்டமுகடு பெயரும்; கைகள் பெயர்ந்தால் பெரிய எட்டுத் திசைகளும் பெயரும்; இவ்வாறு சபை தாங்கமாட்டாது; அதனை அறிந்து திருக்கூத்தை ஆடுவீராக!

திருக்கூத்தின் பெருமையைப் போற்றிய கருத்து. எங்கும் நிறைந்த தன்மை வினையும் குறித்தபடி.

77

அரங்கமாப் பேய்க்காட்டி லாடுவான் வாளா
விரங்குமோ வெவ்வுயிர்க்கு மேழா - யிரங்குமேல்
என்னாக வையான்றா னெவ்வுலக மீந்தளியான்
பன்னா ளிரந்தாற் பணிந்து.

78

இறைவர் எவ்வுயிர்க்கும் வறிதே இரங்குவாரா?; பன்னாளும் பணிந்து இரந்தால், அது காரணமாக இரங்குவர்; அவ்வாறிரங்குவாராயின் எவ்வித மேன்மையுடைத்தாகத்தான் வைக்கமாட்டார்?; எவ்வுலகத்தைத்தான் கொடுத்துக்காவார்? (எல்லாந் தந்து எந்தவித மேன்மையிலும் வைப்பர்).

பணிந்து பன்னாளிரந்தால் இறைவர் இரங்கி எல்லா நலங்களும் ஈவர் என்பது. ஏழாய்! ஏழையே. ஏழை - அறிவினால் ஏழைமை குறித்தது. அரங்கமாப்பேய்க்காடு - பேய்கள் தம் அரங்கமாகக் கொள்ளும் காடு. அரங்கமாய் - என்பதும் பாடம்.

78

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்து மணிந்தவரை யேத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற விதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

79

இறைவரைப் பணிந்தும் திருவடிகளில் மலர் கொண்டணிந்தும், அவ்வாறு அடிமை செய்கின்ற அடியவர்களைப் பணியத் துணிந்தும் என்றிவ்விதமாக இறைவர்க்கு ஆட்செய்யப் பெற்ற இதுவே எமது சிந்தைக்குள்ள பெருமிதமாம்.

ஏத்தத் துணிந்தும் - என்று ஆட்செய்ய - என்று கூட்டுக. பணித்தும் - மனவாக்குக்களால் பணிந்தும்; அணித்தவர் - அவ்வாறு அணிந்தவர்கள்; அவ்வாறு என்பது இசையெச்சம்; என்று (இவ்வாறு) ஆட்செய்யப்பெற்ற என்க. அடியாரவர் ஏத்துதலும் இறைவர்க்கு ஆட்செய்தலேயாம் என்பது. சிந்தையார் - சிந்தை உவப்பின்கண் வந்த உயர்திணைப் பன்மை. செருக்கு - பெருமிதம்; இறுமாப் - இது நன்மையின் வருவது; அறுவகைக் குற்றங்களுட் பட்டதன்று. கொலோ தேற்றக் குறிப்புப்பட வந்த அசை. புராணம் 1734 - 1735 பாட்டுக்கள் பார்க்க.

79