பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி941

 

செருக்கினால் வெற்பெடுத்த வெத்தனையோ திண்டோள்
அரக்கனையு முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

80

இறைவரின் கால்கள் கூற்றுவனையும் வென்றுதைத்தன; அரக்கனையும் அடர்த்தன; அக்கால்கள் மாலயனும் காணாதரற்றி மகிழ்ந்தேத்தப்படுவன.

கால் - உதைத்த(ன); அடர்த்த(ன) என்க. எத்த - உதைத்தன என்று கூட்டுக. திருத்தக்க - என்பது அடிமைப் பண்பின் வந்த என்ற பொருள் தந்து நின்றது. எத்தனையோ - எண்ணின் பெருக்குக் குறித்த மட்டில் வந்தது. அரக்கன் தன் மனத்தில் தனது தோள்களின் பெருமை கருதி வெற்பெடுத்தா னாதலின் அச்செருக்கிற் கொண்டபடி எத்தனையோ - என்றதாம். இருபது என்பது கருத்து. திருவடிப் பெருமையும் ஆற்றலும் துதித்தல் கருத்து. உதைத்து வென்ற கால் என்றும் இயைக்கலாம்.

80

காலனையும் வென்றோங்; கடுநரகங் கைகழன்றோம்;
மேலை யிருவினையும் வேரறுத்தோங் - கோல
வரணா ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

81

முப்புரமெரித்த இறைவருடைய திருவடித் தாமரைகளைச் சார்ந்ததனால் காலனையும் வென்றோம்; கடு நரகங்களின் அனுபவங்களை முன்னமே நீத்து விட்டோம்; மேலை யிருவினைகளையும் வேரோடு களைந்துவிட்டோம்.

அரணார் - முப்புர வாணர்; இகழ்சசி குறித்த பான்மை எனினுமாம். அவிற்தழிய - அவிதல் - சாதல்; அழிதல் - சாம்பரா யொழிதல்; ஒரு பொருட் பன்மொழி யெனினுமாம். தீ அம்பு - தீயாகிய அம்பு; சார்ந்து - சார்பாகப் பற்றுதலால்; காரணப் பொருளில் வந்த வினையெச்சம்; சார்ந்து வென்றோம்; கழன்றோம்; அறுத்தோம் என்று கூட்டுக; காலனையும் - நாரகங் கழலுதலும், வினை வேரறுத்தலுமன்றி என எதிரது தழுவிய எச்சவும்மை பிறிதோராற்றால் வெல்ல மாட்டாத காலனையும் என வுயர்வு சிறப்பும்மை எனினுமாம். இதனால் மரணந் தவிர்த்தல் கூறப்பட்டது. நரகங் கழலுதல் - வினைக்கீடான துன்பானுபவங்கள் ஒழிதல்; இதனால் சஞ்சிதங்கள் ஒழிதல் குறிக்கப்பட்டது. கைகழலுதல் - கை - பகுதிப் பொருளை மிகுதிப்படுக்கும் முன்னொட்டு; கைகூடும் என்புழிப்போலே; மேலை யிருவினை - பிறவிக் கேதுவாகிய சஞ்சித கன்மங்கள்; அதனாற் பிறவி யறுதல் கூறப்பட்டது. இறப்பும் பிறப்பு மின்மையின் திருவடிச் சார்பினிற்றல் கூடியதென்க. எனவே சார்தல் முத்தி சாதனமாதலுடன் பயனுமாய் விளைந்த தென்க. அடியின்கீழ் இருக்கும் பேறுபெற அம்மையார் செல்லும் நிலை குறிக்க.

81

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே யொத்திலங்கிச் சாராது
போந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியவர - நேர்ந்துணரிற்
றாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே யென்றுரைக்கு மின்.

82

உணரின் இவை மின் அல்ல சடைகளே என்று விளங்கும் ஐயனது சடைகள் அவரடிச் சார்ந்தவர்க்குப் பொற்கொழுந்து போல்வன; அடி சாராது பிறிது சார்ந்து செல்வோர்க்குத் தீக்கொடி போலும் தன்மையுடையனவாம்.

சார்ந்தார் - சாராது போந்தார் - அடி சார்ந்தார்களும், சாராது பிறிது சார்பு கொண்டொழுகுவோரும். உணரில் இவை மின் அல்ல; சடையே என்றுரைக்கும்