பக்கம் எண் :


942திருத்தொண்டர் புராணம்

 

தன்மை வாய்ந்த சடைகள். "மின்வண்ண மெவ்வண்ணம் மவ்வண்ண வீழ்சடை" (பொன் -அந் - 1). சடையே என்னும் மின்னல்கள் - அடிச்சார்புடையோர்க்குப் பொற்கொழுந்துபோலக் குளிர்ந்து பயன் செய்வன; சாராதார்க்கு அவையே தீக்கொடிபோலக் கனன்று அழிவு தருவன என்க. தாழ்சுடரோன் - தங்கி வீழும் கதிர்களை யுடையவன்; ஞாயிறு : சாய்தல் - தோல்வி யுறுதல்; ஞாயிற்றினது செங்கதிர்கள் இறைவரது செம்மேனிக்கு ஒப்பாகா என்பது; தழல்வண்ணன் - என்றதனால் வண்ணம் மட்டில் தழல் போல்வது; தன்மை அருளுடையது என்றபடி; வீழ்சடை - தழல் வண்ணனது திருமுடியிலிருந்து வீழ்ந்தது போலும் வளரும் நீண்டசடை; இப்பாட்டுச் சடையினைப் போற்றியது. இதற்கு இவ்வாறன்றிச், சார்ந்த மகளிர்க்குப் பொற்கொடிபோல் விளங்கி, அடையாது நீங்கின மகளிர்க்கு அனற்கொடிபோன்று வருத்து மியல்பினையுடைத்து சடை என்று, என் மகள் கூறுவாள் என்று பொருள் கொண்டனர் ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரானார்; இப்பொருளில் மீன் - மகள் என்றுகொண்டு, என்று மின் உரைக்கும் எனக் கூட்டி உரைத்தனர்.

82

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடு மீண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேற் - றன்போலும்
பொற்குன்று நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலு நெடிது.

83

சிவபெருமான் திருமாலோடும் இசைந்த கோலம் காண்பார்க்கு எதுபோன்றிருக்குமென்று கேட்பீராகில் பொற்குன்றமும் நீலக்குன்றமும் உடன் சேர்ந்து நீண்டு நிற்கின்றன போலும்.

இசைந்தாற் காண்பார்க்கு என் போலும்? என்றீரேல் குன்றும் குன்றும் உடனே நெடிது நிற்கின்ற போலும் என்க. சடையானுக்கும் மாலுக்கும் பொற்குன்றும் நீலக்குன்றும் நிரனிறையாகக் கூட்டுக. "அரியலாற் றேவி யில்லை யையனை யாறனார்க்கே" (நேரிசை); 41ஆவது பாட்டுப் பார்க்க. மாலோடு கூடிய கோலத்தைப் போற்றியது; பொற்குன்றம் - மேருமலை; நீலமலை - இந்திர நீல பருப்பதம் என்க.

83

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியு நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கண் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலு முக்கண்ணாங் கண்.

84

எரியாகிய தீக்கண்ணும் ஏனைக் கண்களாகிய மதியினையும் ஞாயிற்றினையும் ஒக்கும்; திரிபுரங்களைத் தீக் கண்ணினால் வேவச் செய்தாலும் அவற்றுள் மூவரை உளராக்கிக் காத்தலின் அது முக்கண்ணன் தன்மை வாய்ந்தது.

தீயினால் வேவச் செய்த காரணத்தால் பிரானார்க்குக் கண் ஒன்றே என்னவாகாது; ஞாயிறுந் திங்களும் சேர்ந்து அவரது கண் மூன்றாமென்க; ஞாயிறாகிய கதிர் உதிப்பித்தலும், திங்கள் குளிரச் செய்து வளர்த்தலும் செய்தலின் தீக்கண்ணின் செயலில் இம்மூன்றும் விரவியன. எனவே முக்கண் என்க என்பதாம். எரித்தல் செய்த ஒரு தொழிலே மூவரை உள்ளவராக்கிக் காவல் செய்ததாகலின் இவ்வாறு கூறினார் இப்பாட்டால் இறைவரது நெருப்புக் கண்ணைப் போற்றினார். இதுபற்றியே "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" என்றருளினார் அப்பர் பெருமான்.

84

1கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார வெண்ணத்தா லெண்ணியும் - விண்ணோன்