முதல்வர் என்று தெளிந்து அடையும் அறிவின்றிறம். கடுவுண்ட வாய் கருமை கொள்ளாது கடுவிருக்கும் கண்டம் கருத்தது என்னை? என்றது. கருமை விடத்தின் சார்பினால் வந்ததன்று - நீவிர் உலகம் காணக் காட்டும்படி வைத்த கருணை இயல்புபற்றி வந்தது என்ற குறிப்பு. இது இறைவரது முழுமுதற்றன்மையைப் போற்றியது. 89 கூறெமக்கீ தெந்தாய்! குளிர்சடையை மீதழித்திட் டேற மிகப்பெருகி னென்செய்தி - சீறி விழித்தூறும் வாளரவும் வெண்மதியு மீர்த்துத் தெழித்தோடும் கங்கைத் திரை. 90 எம்பெருமானே! பாம்பினையும் மதியினையும் ஈர்த்து இரைத்து ஓடும் கங்கை அலைவெள்ளம் உமது சடைக்கற்றையை மிக்குப் பெருகி ஓடுமாயின் என்ன செய்வீர்? எமக்குச் சொல்வீராக. கங்கைப் பேரியாற்றின் பெருக்கையும், அது சடைக்குள் அடங்கி நிற்கும் இறைவராணையினையும் வேற்றுமுகத்தாற் பராவியது. 90 திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே யாளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ லிம்மைக்கு மம்மைக்கு மெல்லா மமைந்தோமோ; யெம்மைப் புறனுரைப்ப தென்? 91 சிவபெருமானது திருவடிக்கே ஆளாகியும் துதித்தும் தியானித்தும் வாழ்கின்றோம்; அதுதான் இம்மைக்கும் அம்மைக்கும் ஆமாறு அமைந்து நின்றோம்; எம்மைப் புறங்கூறுவதென்னை? புறன் - "புறச்சமயம் பற்றி இகழ்ந்துரைக்கு மொழியும் புறங்கூற்றுமொழியு" மென்பது. (போதம் - உரை); ஈண்டு அறியாதார் கூறுங் கூற்று என்ற பொருளில் அமைந்தது. "அறியா வாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுருவாயென்?" (1770) என்றது இக்கருத்தினைப் பற்றியது. உரை மருவி -வாக்கின் பணி. உணர்ந்தோம் - மனத்தில் எஞ்ஞான்றும் மறவாது வைத்து ஒழுகுதல் குறித்தது; "மொழி பயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்து" (1) என்றது. அம்மை - முத்திநிலை. உரை மருவி என்றது சிவனுரையாகிய ஆகம அளவையின் நின்று, அதன்படி வழிபட்டு - என்றலுமாம். அமைதல் - ஒருப்பட்டு நிற்றல். 91 1என்னை யுடையானு மேகமாய் நின்றானுந் தன்னை யறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க் கருளாக வைத்த அவன். 92 வானோர்க்கருளாக வைத்த தூய சடையுடையானாகிய அவனே என்னை உடைப் பொருளாக வுடையவன்; ஏகமாய் நின்றவன்; தன்னை இன்ன தன்மையனென் றறியலாகாதவன். என்னை உடையான் - தனக்கு அடிமையாக என்னை உடைய தலைவன்; ஏகமாய் நின்றான் - உயிர்களேயாய்க் கலந்து நிற்பினும், அவற்றின் வேறாய்த் தானேயாய் நிற்பான். ஒன்றே பதி; இரண்டில்லை என்ன நிற்பவன் என்றலுமாம். அறியாத - இன்னன் என்றறியவொண்ணாத; "இன்ன தன்மைய னென்றறி யொண்ணா எம்மானை" (நம்பி - ஆரூரர்); "அவையே தானேயாய்" (போதம் - 2.) என்றபடி. ?என்னை யுடையான்" என்றது உயிரேயா யிருத்தலையும், "ஏகமாய் நின்றான்" |