பக்கம் எண் :


96திருத்தொண்டர் புராணம்

 

(மேற்படி - ஆவடுதுறை - 17). "பத்துவாய் கீதம்பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்" (மேற்படி - நனிபள்ளி - 10), "பிறையெயி றிலங்க வங்காந், தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்" (மேற்படி - தனி - 10), "துட்டுத் தீர்த்துச் சுவைபடக்கீதம் கேட்ட" (மேற்படி - குறைந்த - 10), "அலற இரங்கி ஓள்வாள், குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய், செறுத்தாய்" (மேற்படி . திருச்சத்திமுற்றம் - 10), "கடவுந் திகிரிதொழிய" (மேற்படி - தூங்கானைமாடம் - 10), "நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்தெடுத்தான்" (மேற்படி - வன்னியூர் - 10), "செருத்தனாற்றன தேர் செலவுய்த் திடும், கருத்தனாய்க் கயிலை யெடுத்தான்" (மேற்படி - அரிசிற்கரைப் புத்தூர் - 10), "அழுதுய்ந்தனன்" (மேற்படி - திருமங்கலக்குடி - 10), "நகழமால் வரைக்கீழிட்டரக்கர் கோனை நலனழித்து நன்கருளிச் செய்தான்" ('திருத்தாண்டகம், திருப்புன்கூர் - 10), "மலையைக் கையா, லுலங்கிளர வெடுத்தவன் றோள் முடியு நோவவொருவிரலா லுறவைத்தா "ரிறைவா" வென்று, புலம்புதலு மருளொடுபோர் வாளும் வைத்தார்" (மேற்படி - நல்லூர் -10), "எண்ணா விலங்கைக்கோன் றன்னைப் போற்றி யிறைவிரலால் வைத்துகந்த வீசா போற்றி, பண்ணா ரிசையின் சொற்கேட்டாய் போற்றி பண்டே யென்சிந்தை புகுந்தாய் போற்றி" (மேற்படி - கயிலாயம் - 10), "சீலத்தான் றென்னி லங்கை மன்னன் போற்றிச் சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி, கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி" (மேற்படி - மேற்படி - 10), ‘முறிப்பான பேசிமலை யெடுத்தான்றானு முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப், பறிப்பான்கைச் சிற்றரிவாணீட்டி னானைப் பாவியே னெஞ்சகத்தே பாதப்போது பொறித்தானை" (மேற்படி - கீழ்வேளூர் - 10), "பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்தநாம தத்துவனை." (மேற்படி - தலையாலங்காடு - 10), "முரிந்து நெரிந்தழிந்துபா தாளமுற்று முன்கை நரம் பினையெடுத்துக் கீதம் பாட இருந்தவன்" (மேற்படி - எறும்பியூர் - 10), "அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை யலற வடர்த்திட்ட அடியுங் கண்னேன்" (மேற்படி - திருவினா - 10) என்பனவாதி இவையெல்லாம் இராவணன் கயிலைமலையினை எடுத்ததும், வருத்தமுற்றதும், பின்பு அவன் இறைவரைப் பாடியருள் பெற்றதுமாகிய ஒரே பொருளைக் கூறுவன.

நாயனாரது திருப்பதிகங்களுட் சில தவிர ஏனைய வெல்லாம் திருக்கடைக்காப்பில் இவ்வொரு பொருளையே வைத்துப் போற்றுவன. ஆளுடைய பிள்ளையார் திருப்பதிகங்களிலும் எட்டாவது திருப்பாட்டுக்கள் இராவணனைப் பற்றியன வெனினும் அவற்றுட் சில தவிர ஏனைய வெல்லாம் இராவணனைப் பற்றியன வெனினும் அவற்றுட் சில தவிர ஏனைய வெல்லாம் இராவணன் கயிலையை எடுத்துப் பின் அருள் பெற்றான் என்றமட்டில் அவ்வொன்றையே குறிப்பன. "இராவணன் மேலதுநீறு" ("காந்தாரம் - திருநீற்றுப் பதிகம் - 8) " ஏழ்கடல் சூழிலங்கை யரையன்ற னோடு மிடரா0ன வந்து நலியா" (பியந்தைக் காந்தாரம் - பொது - கோளறு பதிகம் - 8), "நீல மாமணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொ, டொல்க - வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்" (சாதாாரி - வட குரங்காடுதுறை, 8) என்ற சிற்சிலவற்றில் இராவணனைப் பற்றி வேறு வகையாலுங் குறித்தருளினர் பிள்ளையார்.

கூற்றாயினவாறு என்ற இத்திருப்பதிகக் கருத்தை எடுத்து விளங்கு முகத்தால், "தெருண்டறியா அத்தன்மைய் னாய விராவணனுக்கு அருளுங் கருணைத் திறமான அதன் மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு" என்ற ஆசிரியார், "தோடுடைய" என்ற பிள்ளையாரது திருப்பதிகக் குறிப்பினைக் காட்டும் போது "மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற், கண்ணுதலான்.