பெருங்கருணைக் கைக்கொள்ளு மெனக் காட்ட..." (திருஞான - புரா - 77) என்று காட்டியதனை ஓர்ந்து உண்மை கண்டுகொள்க. அன்றியும் நாயனார் கூறுவது நேரிற் கண்டவர் கூறுவதுபோலக் கருத்தும் உள்ளுறையும் மெய்ப்பாடும் விளங்க உள்ள திறனும் உணர்க. இவை அவரது முன் சரிதம் கூறுவார்க்குத் துணையாய் நிற்கும் பகுதிகள் என்னலாம். இராவணனது இவ்வாலாறாவது :- அருந்தவஞ் செய்து வரம்பலபெற்ற இராவணன் தனது தோள்வலி கருதித் தேரூர்ந்து பல திசையிலும் சென்றான். கயிலைமலையின்மீது, தேரின் மேலே வானவீதியிற் பறந்துசெல்ல முயன்றான். பாகன் விலக்கினான். அதனைக்கேளாமல் முடுக்குதலும் நந்தியின் ஆணையால் தேர் தடைப்பட்டது. இராவணன் சினந்து "இத்தே ரேக விம்மலை பேர்ப்பன்" என்று கயிலையைப் பெயர்க்க முயன்றான். சிவபெருமான் சிறிது ஒரு விரல் நுனியால் அமிழ்ந்தவே, மலையின்கீழ்ச் சிக்கி நெரிந்து வலிகெட்டுப் பலகாலம் அழுது கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு இராவணன் (அழுபவன்) என்று பெயர் வழங்கியது. அங்குத் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவார் (அவரே பின்பு திருநாவுக்கரசு நாயனாராக அவதரித்தவர் என்பது முன்பிறப்பின் ஒரு வரலாறு) கண்டு இரங்கிச், "சங்கரன் சாமகானப் பிரியன்" என்று அவனுக்குத் தப்பும் உபாயமறிவித்தார். அவனும் அவ்வாறே தன் கை நரம்புகளை எடுத்து வீணை பண்ணிச் சாமவேதம் பாட இறைவர் இரங்கி வெளிப்பட்டு அவனுக்கு அருள்புரிந்து நாளும் வாளும் ஈந்தருளினர் என்பது. துதிப்பவே - ஒவ்வோர் பதிகத்தும் திருக்கடைக்காப்பில் வைத்து முடித்துப் போற்றுவது என்ற குறிப்பும் காண்க. மெய்யுறவே வணங்கினர் என்க. மெய்யுற - உடம்பு கீழே படிய எனவும், "மெய்த்தன்மை யறிந்து துதித்த"தனால் அந்த மெய்மையாகிய திருவருள் பொருந்தும்படி எனவும் உரைக்க நின்றது. 75 1341. | பரசுங் கருணைப் பொரியோ னருளப், பறிபுன் றலையோர் நெறிபாழ் படவந் தரசிங் கருள்பெற் றுலகுய்ந் த"தெனா வடியார் புடைசூ ழதிகைப் பதிதான் முரசம் படகந் துடிதண் ணுமையாழ் முழவங் கிளைதுந் துமிகண் டையுடன் நிரைசங் கொலியெங் குமுழங் குதலா னெடுமா கடலென் னநிறைந் துளதே. |
76 (இ-ள்.) வெளிப்படை. "துதிக்கத் தக்க பேரருளையுடைய பெரியோராகிய சிவபெருமான் இவ்வாறு அருள்புரிய, மயிர் பறித்த புன்மை பொருந்திய தலையினையுடைய சமணர்களது சமயநெறி பாழ்பட்டொழியத் திருநாவுக்கரசர் இங்கு வந்து அருள்பெற்ற அதனால் உலகம் உய்ந்தது" என்று, சிவனடியார்கள் எப்பக்கமும், சூழ்ந்த திருவதிகை மாநகரமானது, முரசமும் தம்பட்டமும், உடுக்கையும், மத்தளமும், யாழும், முழவமும், கிளையும் துந்துபியும், மணியும் என்றிவற்றின் முழக்குடனே, வரிசைப்பட ஒலிக்கும் சங்கங்களும் எங்கும் சத்தித்தலால் நீண்ட பெரிய கடல்போல நிறைந்துளதே. (வி-ரை.) பரசும் - மூவரும், தேவரும், மற்று யாவரும் துதிக்கும். பெரியோன் - சிவபெருமான். புறச்சமய நூல்கிய சிலப்பதிகாரமும் "பிறவா யாக்கைப்" |