பக்கம் எண் :


990திருத்தொண்டர் புராணம்

 

தோட்டத்துள் - இது சோழ நாட்டிற் காணப்படும் அமைதியாக மனையை அடுத்து உள்ளது. இதனால் பரிகலக் குருத்து வாடுதலின்றிப் புதிதாய் இருக்கவேண்டுமென்ற கருத்துப்பற்றித் திருவமுது ஆக்கியபின் குருத்துக் கொண்டுவரவிட்டனர் என்பது கருதப்படும்.

பெரிய வாழை மல்லல் அம் - குருத்து - "குருநாளக் குருத்து" (1469) என்ற தனை விரித்தபடி காண்க. முன் சொல்லியது தாய் தந்தையர் குறிப்பின் ஏவியதும், ஈண்டுக் கூறியது அதனை அதனின் மேலாய் மகன் நிறைவேற்றியதுமாம்.

வான் அரா ஒன்று - வாள் - ஒளி - வாள் போன்று துன்பம்செய்து வதைப்பது என்றலுமாம். "சுடர்விடு நாகம்" (தேவா), "புற்றில்வா ளரவு மஞ்சேன்" (திருவா). அரவுக்கு ஒளியாவது கண்களினின்று வீசும் விடத்தன்மையுடைய ஒளி ஒன்று; "கண்ணெரி காந்துகின்ற பையரவு" (1807); இலங்கையில் உள்ள "திருஷ்டி விட" முடைய பாம்பு வகையினையும் காண்க. இனி, விடப் பல்லின் கூரிய வொளி மற்றொன்று; "கடுவோ டொடுங்கிய தும்புடை வாலெயிறு" (முருகு); "அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று குரவம்பரவை முருகமர் சோலைக் குற்றாலம்" (பிள். தேவா); இவையன்றி அரவுகளின் உடலில் பன்னிறமுடைய மேல் கீழ்த்தோலின் ஒளி ஒன்று; மணிகளின் ஒளியும் குறிப்பு.

அல்லல் உற்று அழங்கிச் சோர - விரைந்து ஏவப்பட்டுப் புக்கு அறிந்த மூத்த திருநாவுக்கரசு என்ற எழுவாய் மேம்பாட்டினின்றும் வருவிக்க; மேல்வரும் மூன்று பாட்டுக்களினும் இவ்வாறே எழுவாய் வருவித்துக் கொள்ள.

அங்கையில் - குருத்தினை அரிந்த கையினில். குருத்தினைப்பற்றி அரியலுற்ற போது அவ்விடத்துத் தங்கிய அரவு கையினில் தீண்டுதல் இயல்பு. வாழைக் குருத்துக்களுள் இவ்வாறு சேரும் விடப்பிராணிகளின் தீமையும் நீங்கும் பொருட்டுப் பரிகல இலைகளை முன்னர் நீரால் கழுவியிடும் மரபு வழங்குவதாம். "நீரால் - விளக்கி" (1821) என்பது காண்க.

தீண்டிற்று - அரவு கொத்திக் கடித்தலுக்கு வழங்கும் மரபு வழக்கு.

அன்றே - அப்பொழுதே; அசை என்றொதுக்குவாறுமுளர்.

ஓல்லையிலணைந்து - அழுங்கி வீழ - என்பனவும் பாடங்கள்.

24

1807.

கையினிற் கவர்ந்து சுற்றிக் கண்ணெரி காந்து கின்ற
பையரா வுதறி வீழ்த்துப் பதைப்புடன் "பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா முன்னம்வே கத்தா லெய்திக்
கொய்தவிக் குருத்தைச் சென்று கொடுப்பனென் றோடி வந்தான்

25

1808.

பொருந்திய விடவே கத்திற் போதுவான் வேக முந்த
வருந்தியே யணையும் போழ்து,"மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவ ரமுது செய்யத் தாழ்க்கயா னறையே" னென்று
திருந்திய கருத்தி னோடு செழுமனை சென்று புக்கான்;்

26

1809.

எரிவிட முறையே யேறித் தலைக்கொண்ட வேழாம் வேகந்
தெரிவுற வெயிறுங் கண்ணு மேனியுங் கருதித் தீந்து
விரிவுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல்வீழ்ந்தான்

27

1807. (இ-ள்.) கையினில்....வீழ்த்து - கையினில் தீண்டிக், கையினையே சுற்றிக்கொண்டு கண்களில் எரியினை வீசுகின்ற நச்சுப்பையினையுடைய அந்த