வது, "எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை"; "வானந் துளங்கிலென்" (தேவா); "பூத மைந்து நிலையிற் கலங்கினும் மாதொர் பாகந் மலர்த்தாள் மறப்பிலார் ஓது காத லுறைப்பி னெறிநின்றார்" (142) என்றபடி மாயை வயப்பட்ட உலகர் கலங்கி நிலைதளரக்கூடிய எது வரினும் சிவனன்பிற் கலங்காத அதனினும் சிறந்த நிலை என்பது குறிக்க மீண்டும் தாயரும் தந்தையாரும் என்று எடுத்துக்கூறியதனுடன் அர்- ஆர் என்ற சிறப்புப்பன்மை விகுதிகளும் புணர்த்தி ஒதினார். மேலும் "பெற்ற மனம் பித்து" என்ற முதுமொழிப்படி உலக நிலையில் இவ்வாறு மகன் வீழக்கண்டபோது துளக்கமுறுவாரில் முன்னிற்பவர் தாயரேயாதலும் குறிப்பு. "தாய் பிடிக்க" என்ற சிறுத்தொண்ட நாயனார் புராணத்தினுள் வரும் இதன் முறுகி விளைந்த நிலையின் தன்மையும் ஈண்டு வைத்துக் கருதற்பாலது. உளம் பதைத்து - இது மகன் மயங்கி வீழக்கண்டவுடன் உலக நிலையின் முதலில் அன்பு காரணமாக நிகழும் உள்ள நிகழ்ச்சியாயினும், அடியவர் திருபணியிற் புகுந்து பணி செய்தவனும், மேலும் செய்யவுள்ளவனுமாகிய ஒருவனுக்கு வந்த துன்பம் என்ற உணர்ச்சி அப்பதைப்பினை அதிகரிப்பித்து அதன் காரணத்தை உற்று நோக்கி யாராயத் தூண்டிற்று என்க. இல்லறத்தில் "வாழ் வாங்கு வாழ்ந்த" எந்தம் பெருமக்களாகிய அடியார்களிடத்து இவ்வாறு உலக நிலையன்பு அங்கங்கும் காணப்படும். ஆயினும் உலகமே பொருளென மயங்கும் ஏனைய மாக்களிடத்துப் போல இவ்வன்பு சிவனடிமைத்திறச் செயல்களுக்கு இடையூறாக நில்லாமையோடு அதனுள் அடிப்பட்டுத் துணையாயும் நின்றது. இவ்வியல்பும் வேற்றுமையும் உணர மாட்டாத புல்லறிவாளர் தத்தம் நிலையே பற்றிப் பலவாறு பிதற்றுவர். உற்று நோக்கி - ஆராய்ந்து. காணப்பட்ட நிலைகளின் துணைகொண்டு காணப்படாத காரணத்தைக், கருதல் அளவையால் நிச்சயிப்பதற்காக ஆய்ந்து. உற்று - என்பது புறச்சோதனையினையும், நோக்கி - என்பது அதன் துணைகொண்டு கருதும் மன நிகழ்ச்சியையும் குறித்தன. உதிரஞ்சோர் வடிவு - இது முதலில் தேற்றமாகக் கண்ணுக்குப் புலப்பட்ட தாதலின் முதற்கண் கூறப்பட்டது. வாழைக் குருத்துக் கொணர்ந்து வைத்த கையில் காணும் ஊறும், அதனில் சோரும் குருதியும் முன்னர்த் தோற்றப்பட்டன. மேல்தோலில் ஊசியாற்கொத்தப்பட்டன போன்ற இரட்டையாகிய ஓட்டைகளும் அவற்றினின்று சிறிதாகக் கசியும் இரத்தமும் என்ற இவையே மருத்துவ நூலோர் இது பாம்பின் கடியினால் ஆயிற்று எனக் கருதித் துணியத் துணைசெய்யும் முதல் அடையாளங்கள் என்பர். இங்கு வடுவும் என்று பாடங்கொள்வாருமுண்டு. மேனி விளங்கிய குறியும் - முன் பாட்டிற் (1809) கூறியவை. குறி - "உதிரஞ்சோர் வடிவு" அன்றிப் பிற குறிகள். "விடத்தினால் வீந்தான்" என்று - உற்று நோக்கிக் கண்ட குறி முதலியவற்றால் துணிந்த முடிபு. இது குறிகளாகிய காரியம், மேலே "புகைதன் னாதியாய வனல்காட்டல்" (சித்தி - அளவை - 10) போலக் காரணமாகி விடத்தினைக் காட்டியதனாற் றுணியச்செய்த காரிய ஏது எனப்படும். இதன் இயல்பெல்லாம் அளவை நூல்களுட் காண்க. துளங்குதல் இன்றி - ஈண்டுத் துளக்கம் என்பது சிவனடிமைத்திறம் பற்றிய அன்பினிலையினின்று நிலைபெயர்தல் என்ற பொருளில் வந்தது. "துளங்காத சிந்தையராய்த் துறந்தோர்" (திருத்தாண்டகம் - கோயில் - 7). துளக்கம் - மன வருத்தம் என்று பொருள்கொண்டு, வீந்தானென்று வருந்தாமல் என்றுரைப்பாருமுண்டு. எவ்வாறு கொள்ளினும், முன் "உளம்பதைத்து" என்றது, நோக் |