பக்கம் எண் :


880திருத்தொண்டர் புராணம்

 

நான் என்பது தம் ஆன்ம வுணர்ச்சி யற்றுச் சிவனிறைவுட்பட்ட அனுபவ முறையில் கண்டது. முன்னர் "என்னுரை பொய்யாம்" (1746) "இவனுக்காகத் தாங்கிய" (1765) என வந்த இடங்களிற் கண்ட நான் என்ற உணர்ச்சி வேறு. அவை உலகம்பற்றிய நினைவுடன் கூடி எழுந்தன. "இப்பிறப்பினி விணைமலர் கொய்துநா னியல்பொடு மஞ்செழுத்தோதித் தப்பி லாதுபொற் கழல்களுக்கிடாது நான்..." என்ற திருவாசகத்தில் வரும் நான் என்னுமிரண்டன் வேறுபாடு போலக் காண்க. ஒருமை - ஒன்றே நினைந்திருந்தே னொன்றே துணிந்தொழிந்தேன், ஒன்றேயென் னுள்ளத்தி னுள்ளடைத்தேன்...ஆளா மது (அந்தாதி - 1).

அப்பொழுது - பேய்வடிவம் பெற்ற அப்பொழுதே. பேய் வடிவம் பெற்ற அதனையே விதந்து "பேயாய நற்கணத்தி லொன்றாய" என்றதனால் அப்போதே நின்றார்.

பாத புண்டரீகங்கள் - பாததாமரைகள். உருவகவணி. புண்ரீகப் பாதம் என்று மாற்றி உவமைத் தொகையாக்கி உரைப்பினுமாம்.

போற்று நற்சணத்தினில் ஒன்றானேன் நான் - திருவடி மறவாது போற்றுதலன்றி வேறொன்றும்செய்யாத சிவகணங்களுள் நானும் ஒருத்தியாயினேன் என்க. "பேயாய, நற்கணத்தி லொன்றாய நாம்" (86) என்ற அம்மையாரது அற்புதத் திருவந்தாதிக்கு ஆசிரியர் உரை செய்து காட்டியவாறு. "நாம்" என்றது "இது மாந்திருப்பன் கொலோ வீசன், பல்கணத் தெண்ணப்பட்டுச், சிறுமா னேந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு" (திருவங்கமாலை) என்றபடி. "அடியார்க்கும் அடியேன்" என்று அடியார்க்குள்ள பெருமைபற்றி வந்த பன்மை. அதனை "நான் நற்கணத்தில் ஒன்றானேன்" என்று அம்மையார் தமக்குக் கிடைத்த பேற்றினைப்பற்றி மகிழ்ந்து கொண்ட கருத்தாக ஒருமையில் பொருள் கொள்க என்று ஆசிரியர் கண்டு காட்டுகின்றவாறு. "அத்தனெனக் கருளியவர் றார்பெறுவாரச்சோவே" (திருவாசகம்); "சிவலோக நாயகன் சேவடிக்கீ, ழாரும் பெறாதவறிவு பெற்றேன் பெற்றதார்பெறு வாருலகில்" (சேந்தனார் - திருப்பல்லாண்டு - 7) முதலிய திருவாக்குக்களின் கருத்துக் காண்க. "யானே தவமுடையேன்...அம்மானுக் காளாயி னேன்" (7); "உண்டே யெனக்கரிய தொன்று" (10); "அடிமை கொண்டாடப் பெற்றோ, மினியவல முண்டோ வெமக்கு" (69); "எந்தையார்க் காட்செய்யப் பெற்ற விது கொல்லோ, சிந்தையார்க் குள்ள செருக்கு" (79); "காலனையும் வென்றோம்...சரணார விந்தங்கள் சார்ந்து" (81) முதலியனவாய் வரும் அற்புதத் திருவந்தாதியின் அம்மையாருடைய கருத்துக்களைப்பற்றி இவ்வாறு ஆசிரியர் காட்டியவாறு காண்க. அற்புதத் திருவந்தாதியின் கருத்து இவ்வாறு அடிமைத்திறத்தில் திளைத்ததாம் என்பது.

அற்புதத்திருவந்தாதி - என்று அத்திருப்பாட்டின் பெயர் குறித்தவாறு. அற்புதம் என்றது அடிமைத்திறத்தினை வியந்தது. அற்புதம் - ஞானம் என்றலுமாம்.

52

1769. (வி-ரை.) சீர் ஆய்ந்த என்க. சீர் - சிவபெருமானுடைய சிறப்புக்கள். அவை பலவும் கூறி "நெய்யாடி தன்றிறமே, கேளாழி நெஞ்சே கிளர்ந்து என்று முடிக்கும் திறம்பற்றி இவ்வாறு கூறினார்.

இரட்டை மாலை - இது திருவிரட்டைமணிமாலை எனப் பெயர் பெறும். பேய் வடிவும் பெற்றவுடன் அத்தன்மையின் திறத்தினைப் புகழ்ந்து திருஅந்தாதியருளினார். அதனை அடுத்து அத்தன்மை ஆக்கிய இறைவனுடைய சிறப்புக்களைப் புகழ்ந்து திருஇரட்டைமணிமாலை யருளினார். இவை யிரண்டும் வணிகனைச் சென்று கண்ட பாண்டிநாட்டுப் பட்டினத்தின் மருங்கிற் (1759) பாடப்பட்டன.