பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்881

 

எடுத்து - சீர்களை விதந்து எடுத்துப் போற்றி. அந்தாதியை நயந்து பாடி என்றதும், மாலையை எடுத்துப் பாடி என்றதும் கருதுக.

ஏய்ந்த பேருணர்வு பொங்க - உற்பவித் தெழுந்த ஞானத் தொருமை (1768) என்றபடி வந்து பொருந்திய ஞானம். பொங்க - மேன்மேலும் பெருகுதலினால்; காரணப் பெருட்டால் வந்த வினையெச்சம். பொங்க - நண்ண - கூர - வந்தார் என்று முடிக்க. பேருணர்வு பொங்கியதனால் கயிலை நண்ண, அருள் முன் கூர்தலும், அதனால் வழிபடும் வழி வருதலும் காரண காரியத் தொடர்பாய் வந்தன.

வழிபடும் வழியால் வந்தார் - வெள்ளிக் கயிலை வரையை வழிபட நண்ணும் வழிக்கொண்டு சென்றனர்.

பேருணர்வு பொங்க - அருள்கூர வழிபடும் வழியால் வந்தார் - திருநாவுக்கரசு நாயனார் திருக்காளத்தி மலையிற் றாள்பணிந்த குறிப்பினாற் - கயிலைமலை காணுமது காதலித்து வழிக்கொண்டார் (1612); இங்கு அம்மையார் சிவபூத கணமாகிய பேய் வடிவம் வேண்டிப் பெற்று அந்தாதியும் மாலையும் பாடிப் பேருணர்வு பொங்கக் கயிலை நண்ண அருள் கூர்தரப்பெற்று வழிக்கொண்டார் - (2) திருநாவுக்கரசரை இறைவர் தீந்தமிழ் புவியின் மேற் பின்னையும் வழுத்துதற்காக கயிலையை அணைவதற் கருளாராகித் (1626) திருவையாற்றிற் காட்சி காணப் பணித்தருளினர்; அம்மையார் கயிலை நண்ண அருள் முன் கூர வழிக்கொண்டாராதலின், கயிலைக் காட்சி கண்டு வரம் வேண்ட. அதன்படி வரம்பெற்று ஆணையின்படி திருவாலங்காட்டில் எழுந்தருளினர் - (3) அப்பர் பெருமான் தாம் கொண்ட மானுட வடிவத்தோடு வழிக்கொண்டு நடந்து சென்றருளியதும், அம்மையார் பேய் வடிவுடன் மனத்தினுங் கடிது சென்றருளியதும் கயிலையைத் தலையால் நடந்துசென்றதும் காணப்படும் - (4) அப்பர் பெருமான் கயிலையில் முனிவராய் வந்த இறைவரது ஆணையால் வாவியில் மூழ்கியவுடன் சுவடுபடாமல் திருவையாற்றில் வாவியில் வந்தேறியதும் கண்டோம்; அம்மையார் இறைவரது ஆணைப்படி மீண்டும் வந்து கயிலை சென்றவாறே தலையினால் நடந்து திருவாலங்காட்டை அடைந்தனர் - (5) வரங் கேட்டுப்பெற்ற அருள் ஆணையின்படி (1777) திருவாலங் காட்டில் திருவடிக்கீழ் என்றும் இருக்கப் பெறுகின்றனர் அம்மையார்; திருவையாற்றில் வந்தெழுந்த அப்பர் பெருமான் பின்னர்த் திருப்புகலூரில் சிவானந்தஞான வடிவேயாகித் திருவடிக்கீழ் எய்தினர் (1692) - என்று இவ்வாறு திருக்கயிலை சென்று அப்பரும் அம்மையாரும் கண்டு மீண்டருளிய வரலாறுகளை ஒப்பிட்டு வணங்கி உய்தல் நமது கடன் என்க. பேருணர்வு - சிவஞானம். "பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார்" (திருஞான - புரா - 72)

வாய்ந்த பேரருள் - ஏய்ந்த பேருணர்வு பொங்க, அதற்கேற்றவாறு வாய்ந்த பேரருள் என்க.

முன்கூர - முன்னே அருள் கூர்தலால் நண்ண வழிபடும் வழியால் வந்தார் என்க. "அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி" (திருவா.) கூர்தல் - மிகுதல்.

53

திருச்சிற்றம்பலம்

அற்புதத் திருவந்தாத் - வெண்பா

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

1

வானத்தா னென்பாரு மென்க;மற் றும்பர்கோன்
றானத்தா னென்பாருந் தாமென்க; - ஞானத்தான்