பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்345

 

சோதி; ஆணொடு பெண் அலி அல்லர்; நீலவுரு வயிரநிறை பச்சை செம்பொன் நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார்; பாரிலங்கு புனலனல்கால் பரமாகாசம் பரிதி மதி சுருதியுமாய்ப் பரந்தார்; கூரிலங்கு வேற்குமரன் றாதை திருவைானக் காவிலோர் சிலந்திக் கந்நாட் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார்; சண்டீசர்க் கருளியவர் ஏழு பெருந் தீத்தமாதாக்களும் வந்தாடும் தீர்த்தமுடையவர்; இவை முதலிய அருட் டன்மைகளுடையவர்; அவர் என் மனத்தகத்தே புகுந்தார்; என்னைஅறுகுணத்தாண்டு கொண்டார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கூத்தனார் - இத்தலத்துச் சுவாமியின் சிறப்புப் பெயர். -(2) கருத்தளவு செருத்தொகுதி - கருதியபடி மூண்டபோரின் மூட்சி. -(3) நீறலைத்த...அடியவர்க்குக் காட்டி - இவ்வாறாகிய தமது திருவுருவத்தை யடியவார் காணத் தோற்றி. - (4) சந்திரனைக் கலை கவர்ந்து - சாபங் காரணமாகக் சந்திரனது கலைகள் தேய்ந்தமையும் இறைவனது நியதி என்பது. "திங்களைத், தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற்சேர்வித்து" (போற்றித்திருக் கலிவெண்பா - 11-ம் திருமுறை ) செக்கர் - பவளம் - மின் - தீ - ஞாயிறு - இவற்றின் பெருகிய ஒளி இறைவனது பேரொளிதெரிக்க ஒரு புடை ஒப்புக் கூறப்படுவன. செய்யர் - சிவந்த மேனியுடையர். கொக்கு - மா.- (5) நீலவுரு...திறத்தார். நீலம் - வயிரம் (வெண்மை - பால்நிறம்) - பச்சை - பொன் - பளிங்கு - இவை சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களின் நிறமென்ப. "நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு, நடுவு படிக நற்குங்கும வன்னம், அடையுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பால், அடியேற் கருளிய முகமிவை யஞ்சே" (7 - 32) என்பது திருமந்திரம். ஆகம பேதம்பற்றி இவை சில பேதங்களாகக் கூறவும்படும். -(7) காரிலங்கு திருவுருவத்தவன் - விட்டுபணு. கமலத்திற் காரணன் - பிரமன். காரணன் - உலகத்தினைப், படைக்கும் இயற்றுதற் கருத்தா. பார்....பரந்தார் - எட்டுமூர்த்தி. -(8) திருவானைக்காவிலோர்....கொடுத்தார் - கோச்செங்கட் சோழர் சரிதம். - புராணர் - பழமையானவர். சைவர் - சிவனும் சிவசம்பந்தமுடையவரும் ஆவர். அங்கரவத் திருவடிக்கு...கொடுத்தார் - சண்டீசநாயனார் சரிதம். -(10) ஏறவாங்கி - பிறவிக்குழியினின்றும் மேலே ஏறும்படி எடுத்து. வாங்குதல் - மேலெடுத்தல். குறிப்புருவகம். ஆங்கே கூவி - வானோர்க்குயர்ந்த உலகமாகிய தனது உலகத்துக்கு வரும்படி அழைத்து. அமருலகனைத்து முருவிப்போக - மறுமை இன்பத்துன்ப அனுபவங்களை எல்லாம் கண்டு கழிப்பித்து. நிலைபெற்ற பெருந்தேவர் பதங்களை யெல்லாங் கடந்து சிவலோகத்திலே செல்லும்படி என்பதும் ஒன்று. குறியில் - இலட்சியத்தின்கண்ணே. இறைவன் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடலின் இலட்சியம் சிவத்துவம் விளங்கி உயிர்கள் ஆனந்த வெள்ளந் திளைத்தலேயாம். அறுகுணம் - இங்கே முற்றுணர்வு முதலாகிய ஆறுகுணங்களே சித்தியார் - "அறுவகைச் சமயத்தோர்க்கும்" என்றதன் உரை பார்க்க. நிர்வாண தீக்கையில் சாட்குண்ணியாபாதனஞ் செய்து சிவத்துவம் விளங்கச் செய்தல் பற்றி யறியப்படும் எண்குணங்களும் ஆறாக அடக்கியம் வுழங்கப்படும். ஆண்டு கொள்ளுதல் - தன் படிவமாக்குதல். "இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும், அருளைப் பெறுவா னாசைப் பட்டேன்" (ஆசைப் - 1) என்பது திருவாசகம். காவிரி....குமரி வரு தீர்த்தம் - ஏழு பெருந்தீர்த்தங்களும் வந்து ஆடும் மகாமக தீர்த்தம். மகாமக வரலாறு. தீர்த்தம் சூழ்ந்த - தீர்த்தக்கரையில் உள்ள. கீழ்க்கோட்டம் - கிழக்கில் உள்ள கோயில். -(11) செறிகொண்ட சிந்தை - தியான உறைப்புள்ள உள்ளம். சிவபவனத் தமுதம் - தியான உறைப்புடையோரை இப்புவனத்தினின்றும் ஏற்றிச் சிவபவனத்து வைத்துத் தன்னையே சுவைத்து இன்புற்