பக்கம் எண் :


346திருத்தொண்டர் புராணம்

 

றிருக்கும்படி தரும் தன்மை சிவபவனம் எனப்படும். அமுதம் - மரணத்தை நீக்குவது. இப்பதிகம் 11 பாட்டுக்களுடையது.

தலவிசேடம் :- குடந்தைக் கீழ்க்கோட்டம் - இது கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரசுவாமி கோயில் என்ப. இது மாமகக் குளக்கரையில் உள்ள மற்றொரு கோயிலாகும் என்றும் கூறுவார். சூரியன் பூசித்த தலம். சித்திரை மாதத்தில் 11-ம் நாள் முதல் மூன்று நாட்கள் சுவாமி திருமேனியில் சூரியனது கதிர்கள் படும் காட்சி இன்றுங் காணப்படுவது இவவரலாற்றை உறுதிப்படுத்தும். பிரளயகால மூர்த்தி இங்குவைத்து வழிபடப் பெறுகின்றார். ஆதிசேடன் பூசித்தமையால் சுவாமி நாகேசுவரர் எனப்படுவர். இத்தலம் ஐயடிகள் காடவர் கோனாயனாரால் க்ஷேத்திரக்கோவையிற் "கடுவடுத்த நீர்" என்ற பாட்டினாற் றுதிக்கப்பட்டுள்ளது. இங்கு நடராசர் சந்நிதி விசேடம். "கூத்தனாரே" என்ற தற்கேற்ப இங்குச் சிவகாமியம்மையார் கையில் தாளமேந்தியுள்ளார். இறைவர் திருக்கூத்தாடும்போது இறைவி அதற்கேற்பத் தாளமிடுகின்றார் என்று தமிழ் வேதம் கூறுகின்றது. "கூடிய விலயஞ் சதி பிழை யாமைக் கொடியிடை யுமையவள் காண, ஆடிய அழகா" (தேவா). சுவாமி - மடந்தைபாகர். அம்மையார் - பெரியநாயகி. பதிகம்1.

இது கும்பகோணம் நிலயத்திணின்றும் மேற்கே கற்சாலை வழி அறை நாழிகையளவில் மகாமத் திர்த்தக் கரையினின்று மேற்கே கால்நாழிகையில் உள்ளதென்ப. மேற்குறித்த மற்றொரு வரலாற்றுக் கோயில் மகாமகத் தீர்த்தத்தினை அடுத்துத் தென்கரையில் உள்ளது.

திருக்குடந்தைக்காரோணம் - நாயனார் பதிகம் கிடைத்திலது, தலவிசேடம் ஆளுடைய பிள்ளையார் புராணத்துக் காண்க.

திருநாலூர் - நாயனாரத பதிகம் கிடைத்திலது ! தலவிசேடம் பின்னர்க் காண்க.

திருச்சேறை

I திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

பெருந்திய விமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பா லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.


விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

6

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- சேறைச் செல்வனாரே, உமையை மாமணம் புணர்ந்து ஒரு பாகமாக வைத்தார்; ஏனை ஆளாக்க் கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் தீர்த்தருள் செய்தார்; விசயனுக்கும், பகீரதற்கும், சண்டீசர்க்கும் அருள்செய்தார்; அவரே கால பயிரவ னானார்; முப்புரமெரித்தார்; பிரம விட்டுணுக்கள் அறியாவண்ணம் நீண்டனர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- இமவான் பெற்ற பெண்கொடி - பார்வதி - ஐமவதி - என்னும் உமையம்மை. பிரிந்ததும், தவம்செய்து மணந்து பாகம் பெற்றதும், பிறவுமாகிய வரலாறுகள் கந்தபுராணம் உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப்