தேசித்தருளிய சிவஞானபோதமென்னுந் திப்பிய நூலினை உண்மை யறிவு மிகுதற்கேதுவாய்த் தமிழாற் செய்துலகிற் குபகரித்தருளிய மெய் கண்டதேவ நாயனார் பரம்பரை விளங்கும் பொருட்டு ஒப்பற்ற திருவாவடுதுறை நகரத்தில் திருவவதாரஞ் செய்த பரமாசாரியராகிய நமச்சிவாய தேசிகரையும் இக்குரவர் பெருமான் சந்தானமாக வாழையடி வாழையாக வந்து மிகவும் அருள் செய்கின்ற ஆசிரியர்கள் பலரையுந் தோத்திரஞ் செய்வாமென்க. (வி - ம்.) சந்தான குரவர்கள் ஒருவர்பின் ஒருவராய் மாணவர் முறையில் வந்தார் திருப்பெயர்கள் வருமாறு : திருக்கயிலை காக்குந் திருநந்தி தேவர், சனற்குமார முனிவர், சத்திய ஞான தரிசனிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியர், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியர் என்பனவாம். ஐயுருபு நிற்றற்குரியவிடத்து ஒடுவுருபு நின்றது; இனி நமச்சிவாய தேசிகனோடும் குரவர்கள் பலரையும் வணங்குவாமெனினுமமையும். (11) அவை யடக்கம் | கருவிக ளனைத்து மென்னுட் கலந்துநின் றியக்கா நிற்கும் | | ஒருவனை யன்றி யானே யுஞற்றுத லின்மை யாலே | | மருவுமென் பாடற் குற்றம் பொறுமென மதிக்க நாணித் | | திருவமர் கல்வி சான்றோர் திறத்தொன்றுஞ் செப்பி லேனால். |
(இ - ள்.) என்னுள்ளே பிரிவறக் கலந்து நின்று, எனக்கறிவிச்சை செயல்கள் விளங்குதற்கேதுவாகிய கரணங்களனைத்தையு மியங்குமாறு செய்தருளும் முதல்வனையல்லாமல் அம்முதல்வன் பாடுவித்தாற் பாடு வோனாகிய அடியேன் சுதந்தரமாகச் செய்தலின்மையால் எளியேன் பாடலிற் பொருந்துங் குற்றங்களைப் பொறுத்துக் கொண்மின் என நாணமுற்றுச் சொற்பொருளாகிய செல்வந் தங்கப்பெற்ற கல்வியானமைந்த பெரியோரிடத்தொன்றுஞ் சொல்லே னென்க. (வி - ம்.) கருவிகள் ஆன்ம தத்துவ முதலிய அகக்கருவி முப்பானாறும். நால்வகை வாக்கு முதலிய புறக்கருவிகள் அறுபதுமாம். எனவும் மதிக்கவுமென்னும் எண்ணும்மைகள் தொக்கன; மதிக்க என்பதற்கு நினைக்கவெனப் பொருள் கூறுவாருமுளர்; என என்பதனை மதிக்க வென்பதனோடுங் கூட்டுக; பொறும் என்பதை "உண்மென விரக்குமோர் களிமகன் பின்னரும்" (மணிமேகலை 3 : 103) என்றாற்போலப் பொருள் கொள்க. நாணி ஒன்றுஞ் செப்பிலே னெனக் கூட்டுக. (1) | பசுகர ணங்க ளெல்லாம் பதிகர ணங்க ளாக | | வசிபெறு மடியார்க் காயின் மன்னிய வொருமை தன்னால் | | இசையுமற் றவரி னான்றோர்க் கென்னுரை யோம்பு கென்னக் | | கசிவறு மனத்தி னேனுங் கட்டுரைப் பதுமாண் பன்றே. |
|