(இ - ள்.) உயிர்கட்குப் பாதுகாப்பாகவமைந்த பிரணவ மறை மொழியின் பொருளாகிய முருகவேள், திருத்தணிகை நகரத்தையுடைய மலையின்கண் போரை விரும்பிய வளைந்த வில்லையுடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியை யாழோர் மணம் புணர்ந்து உடனழைத்துக் கொண்டு வந்த செய்தியை இதுகாறும் கூறினாம்; இனி, அப்பெருமான் சடங்குகளோடு அவ்வள்ளிநாயகியைத் திருமணம் புரிந்த செயலைக் கூறுவேம் கேண்மின். (வி - ம்.) அரணம் - பாதுகாவல். முரண் - போர். இரணம் - நிணம். கரணம் - சடங்கு. கடி - திருமணம். (643) களவுப்படலம் முற்றிற்று. |