பக்கம் எண் :

1480தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
வெம்மை - விருப்பம் 206
வெயில்தழும்பிய - ஒளி விளங்கிய 177
வெயின்மணி - சூரியகாந்தக்கல் 322
வெய்து - விரைவு 433
வெய்யதாய் - விருப்பந் தரத்தக்கதாய் 973
வெய்யவன்தினம் - ஞாயிற்றுக் கிழமை 1401
வெய்யோன் - கதிரவன் 49
வெரித்தலை - முதுகில் 1331
வெரிநீயார் - புறங் கொடார் 128
வெரிந் - முதுகு 304
வெருக்கிளர்ந்த விழி - கண்டோர் அஞ்சும்படியான கண் 1259
வெருள் - மயக்கம், அஞ்சத்தக்க 13, 289
வெளில் - யானைகட்டுந் தறி 107, 718
வெளிற்றறிவு - பேதைமை 1297
வெளிற்றுடலிபம் - வெள்ளை யானை 326
வெள்ளம் - ஒருவகை எண் 54
வெள்ளாங்குருகு - கொக்கு 1051
வெறி - வேலனாடல் 1116
வெறிப்ப - வெறியாடல் செய்ய 1184
வெறியயர் - வெறியாடுதலைச் செய்கின்ற 20
வெறுக்கை - செல்வம் 272
வெறுத்தல் - செறிதல72, 766
வெற்பர் - குறிஞ்சி நிலமக்கள் 28
வெற்ற - வறிது 595
வேங்கடச்சிலம்பு - திருப்பதி மலை 228
வேட்டம் - விருப்பம் 646
வேட்டு - விரும்பி 209
வேதசயிலம் 185
வேதமுன்மொழி - பிரணவம் 646
வேதிகை - திண்ணை, மேடை 906
வேத்திரம் - பிரம்பு 6, 242
வேயினர் - ஒற்றர் 835
வேய் - மூங்கில், ஒற்று 23, 782
வேய்த்தல் - ஒற்றியறிதல் 712
வேய்ந்து - அணிந்து 20
வேரல் - மூங்கில் 1287
வேரி - வாசனை, நாற்றம் 38, 1149
வேர்ப்பு - வேர்த்தல் 1086
வேலடிகள் - முருகப் பெருமான் 459
வேலை - பொழுது 922
வேல்வலத்தார் - முருகக் கடவுள் 1249
வேழத்தரசு - பட்டத்து யானை 1272
வேழத்தின்கோடுகள் - யானைத்தந்தங்கள் 30
வேழம் - மூங்கில், கரும்பு 233, 264
வேளாண்மை - உதவி 270
வேற்கைவள்ளல் 866
வை - வைக்கோல், கூர்மை 71, 422
வைக - கழிய 871
வைகல் - நாள் 284
வைச்சிரம் - வைரமணி 1265
வைதிகபூதி - முறைப்படி செய்யப்பட்ட திருநீறு 907
வைதுருதேயர் - பிதுரரில் ஒரு சாரார் 201
வைத்த - கூர்மைபொருந்திய 215, 1307
வைப்பிரசம் - மேருமலைச் சாரலில் உள்ள ஒருபொழில் 608
வைப்பு - இடம், நாடு, பதி, வைப்பிடம் 291, 417, 457, 866
வௌவுவார் - பற்றுவார் 60