பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1493

(கு - ரை.) மயக்கம் ஆம் - விரகநோய் தோன்றக் காரணம் ஆகிய. வனம் - அழகு. முயக்கம் - கலவி. முளி கருஞ் சேதகப் பயம்பில் - குழைந்த கரிய சேறு நிறைந்த பள்ளத்தில். புயக்கலாது - கரைமேல் எடுத்து விடுதற்கு இயலாதவாறு. அருவினைப் புயக்கு - கொடிய வினையாகிய பாம்பின் நஞ்சை. நயக்க மேவரும் - கெடுத்துக் காத்தருள முன்வரும். நலத்தரும் அருள் - நன்மையைச் செய்யும் அரிய திருவருள்.

மடவார் முயக்கமாகிய சேதகப் பயம்பில் அழுந்திய வினைப் புயக்கு நயக்க தணிகையான் அருள் மேவரும் என்க.

புயங்கம் - பாம்பு, ஈண்டு ஆகுபெயராய் நஞ்சை உணர்த்தியது. 'புயங்கம்' என்பது கடைக் குறைந்து நான்கன் உருபு ஏற்று 'புயக்கு' என்று ஆயிற்று. 'நைக்க' என்பது நயக்க எனத் திரிந்து நின்றது. 'புயக்கு' - உருபு மயக்கம்.

(27)

 அருளி லாதவ ராயினு மறவழி நெறிநூற்
 பொருளி லாதவ ராயினும் பொறிவழி யிகந்த
 மருளி லார்பயிற் றணிகையான் றனைவழுத் துநரேல்
 இருளி லாதவ ராவதற் கையமொன் றின்றே.

(கு - ரை.) பொறிவழி இகந்த மருள் இலார் - பொறிகள் ஐந்தையும் புலன்வழி செல்லாவாறு அடக்கிய மெய்யுணர்வுடையார். வழுத்துநரேல் - போற்றி வருவார்களாயின். இருள் இலாதவர் - அறியாமையின் நீங்கியவர், நரகை அடையாதவர். ஐயம் ஒன்று இல்லை - சிறிதும் ஐயமில்லை.

அருளிலாதவராயினும், தீநெறியில் ஈட்டிய பொருளுடைய ராயினும் தணிகையான்றனை வழுத்துநரேல் இருள் இலாதவர் ஆவதற்கு ஐயம் இல்லை
என்க.

(28)

 இன்று வேண்டினு மீட்டும்வேண் டாமையி னீண்டு
 மன்ற லோதியர் போகமா திகளெலாம் வளர்த்து
 நின்ற வாணவக் குறும்பினை நீவுபூந் தணிகைக்
 குன்ற வேலவ னருளினாற் கோணைவான் வீடு

(கு - ரை.) மீட்டும் - மறுபடியும். மன்றல் - நறுமணம். ஓதியர் - கூந்தலையுடைய மகளிர். குறும்பு - வலிமை, கொடுமை. நீவு - துடைத்தருள்கின்ற. கோணை - அழிவின்மை.

ஓதியர் போகமாதிகள் எலாம் வளர்த்து நின்ற ஆணவக் குறும்பினை நீவு வேலவன் அருளினால் வீடு இன்று வேண்டினும் மீட்டும் வேண்டாமையின் ஈண்டும் என்க.

(29)

 வீட்டி யைம்புல னெனுமரில் படும்வெறி வனத்தை
 நாட்டு மைம்பொறி யெனும்புலன் முழுவது நவைகள்
 ஓட்டு நீலவெற் பிறையவ னோங்குதன் னருளாற்
 கூட்டு மானந்தம் விளைநரன் றோபகை குமைத்தோர்.