| | அற்றவருக் கற்றபர மானந்தப் பெருவெள்ளம் | | | உற்றதிருத் தணிகைவரை யுறப்பணிந்தா ரேயன்றி | | | மற்றவரை வணங்குநரும் வணங்குநரை வணங்குநரும் | | | பற்றறுத்துத் துடைத்தார்கள் பங்கயத்தோன் கையெழுத்தே. |
(கு - ரை.) அற்றவருக்கு - பற்று அற்றவர்களுக்கு. அற்ற - எல்லையில்லாத. பெருவெள்ளம் உற்ற - பெருவெள்ளமாகப் பொருந்திய முருகன் எழுந்தருளியிருக்கும். பங்கயத்தோன் கையெழுத்து - நான்முகன் எழுதிய தலை எழுத்து, ஊழ்வினை. அற்றவருக்கு ஆனந்தப் பெருவெள்ளம் உற்ற தணிகைவரை பணிந்தாரே அன்றி அவரை வணங்குநரும், வணங்குநரை வணங்குநரும் பற்று அறுத்துப் பங்கயத்தோன் கையெழுத்துத்துடைத்தார்கள் என்க. தணிகை வள்ளலின் அடியாரும், அடியார்க்கு அடியாரும், அவர்க்கு அடியாரும் பிறவிப் பிணி நீங்கப் பெறுவர் என்பது கருத்து. (100) திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் குறிப்புரையும் முற்றும். |