கரத்தை நீண்ட நாவினாற்றுதித்துத் திருவாடை யின்கட் டங்கப்பெற்ற மேகலா பரணத்தை யணிந்த அல்குலையுடைய உமாதேவியாரைப் பாகத்திலேயுடைய சிவபெருமான் புகழை அதிகமாகத் தங்கச் செய்கின்ற செவியினை யுடையவர்களாவார்கள். (வி - ம்.) அழுத்து - தங்கிய. அழுத்தி - இருத்தி. பஞ்சு - ஆடை. சொல் - புகழ். விஞ்ச - மிக; ஈறுதொக்கது. அழுத்து - நிறைக்கின்ற. (8) | இன்ன வாய மேன்மைசான் றியாணர் வண்மை நாடொறும் | | மன்னு கின்ற நைமிச வனத்து வேறு மாதவர் | | நன்னர் யூப மாமக நடாத்த லைக்கு றித்தரோ | | துன்னும் வேலை யேழும்வந்து தொக்க தென்ன முற்றினார். |
(இ - ள்.) இத்தன்மையான் மேன்மை மிகுந்து புதிதாகிய வள்ளற்றன்மை நிலைபெறுகின்ற நைமிசாரணியத்தின்கண் வேறிடத்துள்ள பெரிய தவத்தினர் நல்ல யாகத்தூணை நாட்டி மகஞ்செய்தலைக் கருதி ஒன்றோடொன்று பொருந்திய எழுகடலும் வந்து ஆண்டுக் கூடிய தென்று சொல்லும்வண்ணம் கூடினார். (வி - ம்.) யாணர் வண்மை - புதிதாகிய வள்ளற்றன்மை, யூபம் யாகத்தினாட்டுந்தூண். முற்றினார் - அடைந்தார். (9) வேறு | பிருகு வுக்கிர சீலன் போதா யணன்பி சிங்கிவி பாண்டகன் | | துருவ னாரதன் சுப்பி ரன்புதன் சுமதி யத்திரி சங்கமன் | | அரித கன்பவு லன்சு முந்தர னாபத் தம்பன கத்தியன் | | கருண னங்கிர சன்ப ருப்பதன் காத்தி யாயணன் கண்ணுவன். |
(இ - ள்.) பிருகும், உக்கிரசீலனும், போதாயணனும், பிசுங்கியும் விபாண்டகனும், துருவாசனும், நாரதனும், சுப்பிரனும், புதனும், சுமதியும், அத்திரியும், சங்கமனும், அரிதகனும், பவுலனும், சுமுந்தரனும், ஆபத்தம்பனும், அகத்தியனும், கருணனும், அங்கிரசனும், பருப்பதனும், கார்த்தியாயணனும், கண்ணுவனும். (10) | பவுமன் பாசத ரன்ப ராசரன் பங்கு பப்புரு பக்குவன் | | கவுசி கன்கபி லன்க லாதரன் காணன் காலன்கை வல்லியன் | | கவுத மன்சர பங்கன் முற்கலன் காலவன் பண்டி தோத்தமன் | | சவுன கன்சதா னந்தன் வாரன்சா தாத பன்சம தக்கினி. |
(இ - ள்.) பவுமனும், பாசதரனும், பராசரனும், பங்கென்பவனும், பப்புரு என்பவனும், பக்குவனும், கவுசிகனும், கபிலனும், கலாதரனும், காணனென்பவனும், காலனும், கைவல்லியனும், கவுதமனும், சரபங்கனும், முற்கலனும், காலவனும், பண்டிதோத்தமனும், சவுனகனும், சதானந்தனும், வாரனென்பவனும், சாதாதபனும், சமதக்கினியும். இதனை அண்மினர் (13) என்ற வினைமுற்றுடன் முடிக்க. |