(வி - ம்.) உத்தாலகவாரணியம் - குற்றாலம். பதியிரண்டாவதன் றொகை ஆணவவித்தென மாற்றுக. அத்தானம் - ஈண்டுச் சத்திய வுலகம். (6) வேறு | கரந்து வைகினுங் கற்றவர் தம்புகழ் | | நிரந்து தோற்றப் படுவது நேர்மணுள் | | பரந்த வேர்ப்பல வின்பழம் யாவர்க்கும் | | சுரந்த வாசத்திற் றோற்றுமொர் பாலெலாம். |
(இ - ள்.) ஒருபாலெல்லாம் மண்ணுட்பரவிய வேர்ப்பலாவின் பழம் யாவர்க்கும் நிறைந்த வாசத்தினாற் றோன்றாநிற்கும். (அங்ஙனந் தோன்றாநின்ற லென்போலவெனின்) எல்லா நூல்களையுங் கற்றவர் மறைந்து தங்கினாலும் அவர் புகழ் யாண்டும் வியாபித்துத் தோற்றப் படுவதற்கு ஒப்பாகும். (வி - ம்.) நிரந்து - கலந்து; வியாபித்து. நேராகும் - விகாரம். பரந்த - பரவிய. சுரந்த - நிறைந்த. "நிரைத்த தீவினை" யென்னும் செய்யுளின் "தரைத்த லத்தக மார்ந்ததொர் பாலெலாம்" (சிந்தாமணி) என்றாற் போலக் கொள்க. (7) | உறும்ப லாயிர வண்டமு டம்பெலாம் | | பெறும்ப ராபரன் பெற்றிநி கர்ப்புற | | நறும்ப லாயிர நன்கனி தூங்கிய | | குறும்ப லாவின் குழாமொரு பாலெலாம். |
(இ - ள்.) மிக்க பல்லாயிரவண்டங்கள் தனது திருமேனி யெங்கணுந் தங்கப்பெறுகின்ற மேலாகிய இறைவன்றன்மையை யொப்ப நல்ல பல வாயிரக்கணக்கான முதிர்ந்த கனிகள் தூங்குகின்ற குறும்பலாவின் கூட்டங்கள் ஒருபாலெல்லாம் உள்ளன. (வி - ம்.) இஃது உவமையணி. உறும் - மிக்க. பெற்றி - தன்மை. (8) | ஆண வப்பிணி நீங்கவ ரும்பயன் | | மாண நல்கரன் மானமந் திக்குலம் | | காணு மென்கறி யைக்கறித் தாழ்பறழ்க் | | கூணி ருங்கனி யூட்டுமொர் பாலெலாம். |
(இ - ள்.) ஆணவமாகிய நோய் நீங்கலால் பெறுதற்கரிய வீட்டின்பமாகிய பயனை மிகவுண்பிக்கின்ற இறைவனை யொப்பக் குரங்கின் கூட்டங்கள் எதிரே காணப்பெறுகின்ற மிளகைக் கடித்துறைத்தலால் துன்பத்திலாழ்கின்ற குட்டிகளுக்கு (அவ்வுறைப்பு நீங்க) உண்ணத்தக்க சுவையின் மிகுந்த பழங்களை யொருபகுதியி னிடங்களிலெல்லாம் உண்பிக்கும். (வி - ம்.) நீங்க - செயவெனெச்சங் காரணப்பொருட்டு. நல்கு - ஊட்டுகின்ற. கறி - மிளகு. ஆழ் - (உறைப்பாற்) துன்பத்திலாழ்கின்ற, |